கிரிப்டோவுக்கு வரி விதிப்பு தேவை

தினமலர்  தினமலர்
கிரிப்டோவுக்கு வரி விதிப்பு தேவை

கிரிப்டோ நாணய முதலீடு பெரும் விவாதத்தை ஏற்படுத்திஉள்ள நிலையில், கிரிப்டோ முதலீட்டை சட்டப்பூர்வமாக்க வேண்டிய தேவையில்லை என்று பெரும்பாலானோர் கருதுவதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது.‘டிஜிட்டல்’ மேடையான ‘லோகல் சர்க்கிள்ஸ்’ அண்மையில் கிரிப்டோ முதலீடு தொடர்பாக இணையம் வழி ஆய்வை நடத்தியது.

இந்த ஆய்வில் பங்கேற்றவர்களில், 54 சதவீதத்தினர் கிரிப்டோ முதலீட்டை சட்டப்பூர்வமாக்க வேண்டாம் என்றும், இதை வெளிநாட்டு டிஜிட்டல் சொத்தாக கருத வேண்டும் என்றும் தெரிவித்துள்ளனர்.எனினும், ஆய்வில் பங்கேற்றவர்களில் ஒரு பிரிவினர், இதை சட்டப்பூர்வமாக்கி வரி விதிக்கலாம் என்றும் தெரிவித்துள்ளனர்.

கணிசமான நபர்கள், கிரிப்டோ முதலீடு தொடர்பான விளம்பரங்கள், அதன் இடர் அம்சங்களை தெளிவாக குறிப்பிடுவதில்லை என தெரிவித்து உள்ளனர்.இந்திய குடும்பங்களில் 87 சதவீதத்தினர் கிரிப்டோ முதலீடு அல்லது பரிவர்த்தனை கொண்டிருக்கவில்லை என பங்கேற்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.

தனியார் கிரிப்டோ நாணயங்களை தடை செய்வது தொடர்பான மசோதா அறிமுகம் செய்யப்பட உள்ள நிலையில், இந்த ஆய்வில் முடிவுகள் வெளியாகிஉள்ளது குறிப்பிடத்தக்கது. ஆய்வு முடிவுகளை அரசிடம் பகிர்ந்து கொள்வோம் என லோக்கல் சர்க்கிள்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

மூலக்கதை