கேரளாவில் குற்றச் செயல்களை தடுக்க புதிய ஆப் அறிமுகம்

தினகரன்  தினகரன்
கேரளாவில் குற்றச் செயல்களை தடுக்க புதிய ஆப் அறிமுகம்

திருவனந்தபுரம்: கேரளாவில் குற்ற செயல்களை தடுப்பதற்கு வசதியாக புதிய ஆப் உருவாக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் ஏற்கனவே குற்றம் செய்தவர்களை தினசரி இரவு வீடுகளில் சென்று படம் பிடித்து கண்காணிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது. கேரளாவில் சமீப காலமாக கொலை, கொள்ளை, வழிப்பறி உள்பட குற்ற செயல்கள் அதிகரித்து வருகின்றன. இதையடுத்து குற்ற செயல்களை தடுக்க கடும் நடவடிக்ைக எடுக்க அனைத்து மாவட்ட எஸ்பிக்களுக்கும், டிஜிபி அனில்காந்த் உத்தரவிட்டார். அதில் கூறியிருப்பதாவது: கேரளாவில் குற்ற செயல்களில் ஈடுபடுபவர்களை கண்காணிக்க ‘க்ரைம் டிரைவ்’ என்ற பெயரில் ஒரு ஆப் உருவாக்கப்பட்டுள்ளது. ஒன்றுக்கும் மேற்பட்ட குற்ற செயல்களில் ஈடுபட்டவர்களை தினசரி கண்காணிக்கவும் தீரமானிக்கப்பட்டுள்ளது. இதுபோன்ற குற்றவாளிகள் மற்றும் சமூக விரோதிகள் இரவு நேரங்களில் அவர்களது வீடுகளில் தான் இருக்கிறார்களா? என்று பரிசோதனை நடத்தப்படும். அந்தந்த போலீஸ் நிலையங்களுக்கு உள்பட்ட பகுதிகளில் குற்ற செயல்களில் ஈடுபட்டவர்களின் வீடுகளுக்கு இரவு நேரங்களில் போலீசார் ரோந்து செல்ல வேண்டும். பின்னர் அவர்களது போட்டோக்களை எடுத்து ஆப்பில் பதிவேற்றம் செய்ய வேண்டும். இரவு 11 மணி முதல் அதிகாலை 4 மணிக்கு இடையே இந்த பரிசோதனை நடத்தப்படும். இந்த நேரத்தில் குற்ற செயல்களில் ஈடுபட்டவர்கள் வீட்டில் இல்லை என்றால் உடனடியாக எஸ்பிக்கு ஆப் மூலம் தகவல் தெரிவிக்க வேண்டும். இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

மூலக்கதை