டேவிஸ் கோப்பை டென்னிஸ்: ஈக்வடாரை வீழ்த்தியது ரஷ்யா

தினகரன்  தினகரன்
டேவிஸ் கோப்பை டென்னிஸ்: ஈக்வடாரை வீழ்த்தியது ரஷ்யா

மாட்ரிட்: டேவிஸ் கோப்பைக்கான ‘ஏ’ குரூப்பில் ஸ்பெயின், ரஷ்யா மற்றும் ஈக்வடார் ஆகிய நாடுகள் இடம் பெற்றுள்ளன. நேற்று நடந்த 2வது ஒற்றையர் போட்டியில் ஈக்வடாரின் எமிலியோ கோமசை 6-0, 6-2 என நேர் செட்களில்  ரஷ்ய வீரர் டேனில் மெட்வடேவ் வீழ்த்தினார். இதன் மூலம் குரூப் ஏ பிரிவில் ரஷ்யா முதலிடத்தை பிடித்துள்ளது. முன்னதாக நடந்த முதலாவது ஒற்றையர் போட்டியில் ரஷ்ய வீரர் ஆண்ட்ரே ரப்லெவ் 6-3, 4-6, 6-1 என 3 செட்களில் ஈக்வடாரின் முன்னணி வீரர் ராபெர்ட்டோ குவிராசை போராடி வீழ்த்தினார்.இந்த வெற்றிகளின் மூலம் 2-0 என்ற கணக்கில் தற்போது குரூப் ஏ பிரிவில் ரஷ்யா முதலிடத்தில் உள்ளது. ஈக்வடாருக்கும், ரஷ்யாவிற்கும் இடையேயான இரட்டையர் போட்டி இன்று மாலை நடைபெற உள்ளது. டேவிஸ் கோப்பை ‘ஈ’ குரூப்பில் இத்தாலி, கொலம்பியா மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகள் இடம் பெற்றுள்ளன. இதில் நேற்று மாலை நடந்த ஒற்றையர் போட்டியில் கொலம்பிய வீரர் டேனியல் இலாஹி காலனை 7-5, 6-0 என நேர் செட்களில் இத்தாலியின் வளர்ந்து வரும் நட்சத்திரம் ஜான்னிக் சின்னர் வீழ்த்தினார்.

மூலக்கதை