அஜித்தின் வலிமை வெளிநாட்டு உரிமை விற்பனையானது

தினமலர்  தினமலர்
அஜித்தின் வலிமை வெளிநாட்டு உரிமை விற்பனையானது

நேர்கொண்ட பார்வை படத்தை அடுத்து எச்.வினோத் இயக்கத்தில் மீண்டும் அஜித் நடித்துள்ள படம் வலிமை. ஹூமாகுரோசி, கார்த்திகேயா என பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்க, போனிகபூர் தயாரித்துள்ளார். இப்படம் 2022 பொங்கலுக்கு திரைக்கு வருகிறது.

இந்நிலையில் வலிமை படத்தின் டீசர், டிரெய்லர் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, அமெரிக்கா, பிரிட்டன் மற்றும் ஐரோப்பா நாடுகளில் வலிமை படத்தை வெளியிடும் உரிமையை ஹம்சினி எண்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் பெற்றுள்ளது. மேலும் இதுவரை வெளியான அஜித் படங்களையெல்லாம் விட வலிமை படம் அதிகப்படியான தொகைக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

மூலக்கதை