பாக்., அணி பதிலடி * வங்கதேச ரன்குவிப்புக்கு... | நவம்பர் 26, 2021

தினமலர்  தினமலர்
பாக்., அணி பதிலடி * வங்கதேச ரன்குவிப்புக்கு... | நவம்பர் 26, 2021

சிட்டகாங்: வங்கதேச அணிக்கு எதிராக சிட்டகாங் டெஸ்டில் பாகிஸ்தான் அணி சிறப்பான துவக்கம் கண்டது. 

வங்கதேசம் சென்றுள்ள பாகிஸ்தான் அணி, இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் டெஸ்ட் சிட்டகாங்கில் நடக்கிறது. முதல் நாள் முடிவில் முதல் இன்னிங்சில் வங்கதேச அணி 253/4 ரன் எடுத்திருந்தது. முஷ்பிகுர் (82), லிட்டன் தாஸ் (113) அவுட்டாகாமல் இருந்தனர்.

ஹசன் ‘ஐந்து’

நேற்று இரண்டாவது நாள் ஆட்டம் நடந்தது. 5வது விக்கெட்டுக்கு 206 ரன் சேர்த்த போது லிட்டன் தாஸ் (114) அவுட்டானார். முஷ்பிகுர் ரகிம் 91 ரன்னுக்கு அவுட்டானார். மற்ற வீரர்கள் ஏமாற்ற வங்கதேச அணி முதல் இன்னிங்சில் 330 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. மெஹிதி ஹசன் (38) அவுட்டாகாமல் இருந்தார். பாகிஸ்தான் சார்பில் ஹசன் அலி 5 விக்கெட் சாய்த்தார்.

நல்ல துவக்கம்

பாகிஸ்தான் அணிக்கு அபித் அலி, ஷபிக் ஜோடி சிறப்பான துவக்கம் கொடுத்தது. இருவரும் அரைசதம் அடித்தனர். இரண்டாவது நாள் முடிவில் பாகிஸ்தான் அணி முதல் இன்னிங்சில் விக்கெட் இழப்பின்றி 145 ரன்கள் எடுத்து, 185 ரன்கள் பின்தங்கி இருந்தது. அபித் அலி (93), ஷபிக் (52) அவுட்டாகாமல் இருந்தனர். 

மூலக்கதை