இரண்டாவது டெஸ்ட்: ரசிகர்களுக்கு அனுமதி | நவம்பர் 27, 2021

தினமலர்  தினமலர்
இரண்டாவது டெஸ்ட்: ரசிகர்களுக்கு அனுமதி | நவம்பர் 27, 2021

மும்பை: இரண்டாவது டெஸ்ட் போட்டியை நேரில் காண ரசிகர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

இந்தியா–நியூசிலாந்து மோதும் இரண்டாவது டெஸ்ட் வரும் டிச.3ல் மும்பை வான்கடே மைதானத்தில் துவங்குகிறது. இப்போட்டியை ரசிகர்கள் நேரில் கண்டு களிக்கலாம்.  

இது குறித்து மகாராஷ்டிரா கிரிக்கெட் சங்க அதிகாரி ஒருவர் கூறுகையில்,‘‘வான்கடே மைதானத்தில் 30 ஆயிரம் ரசிகர்கள் அமர்ந்து போட்டியை காணலாம். கொரோனா அச்சம் காரணமாக, 25 சதவீத இருக்கைகளுக்கு அனுமதி அளித்து மகாராஷ்டிர அரசின் தலைமை செயலர் உத்தரவிட்டுள்ளார். இரண்டாவது டெஸ்ட் போட்டியை நேரில் காண ரசிகர்கள் மிகுந்த ஆர்வமாக உள்ளனர். எங்களை பொறுத்தவரை மைதானத்தில் 50 சதவீத ரசிகர்களுக்கு அனுமதி அளிக்க வேண்டுமென வலியுறுத்தி வருகிறோம்,’’ என்றார். 

மூலக்கதை