அனைத்துக்கட்சி கூட்டத்தில் 11 கோரிக்கைகளை வலியுறுத்திய திமுக எம்.பி.க்கள்: டி.ஆர். பாலு, திருச்சி சிவா, டெல்லியில் கூட்டாக பேட்டி

தினகரன்  தினகரன்
அனைத்துக்கட்சி கூட்டத்தில் 11 கோரிக்கைகளை வலியுறுத்திய திமுக எம்.பி.க்கள்: டி.ஆர். பாலு, திருச்சி சிவா, டெல்லியில் கூட்டாக பேட்டி

டெல்லி: நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நாளை இன்று நடைபெற்ற அனைத்துக்கட்சி கூட்டத்தில் பங்கேற்ற பிறகு திமுக எம்.பி.க்கள் டி.ஆர்.பாலு, திருச்சி சிவா ஆகியோர் செய்தியாளர்களை சந்தித்து பேசினர். அப்போது பேசிய அவர்கள்; தமிழ்நாட்டில் மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சாலைகளை சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மீட்பு பணிகளில் தமிழ்நாடு அரசு முழு வீச்சில் செயல்பட்டு வருகிறது. நிரந்தர சீரமைப்பு பணிகளை மேற்கொள்ள ரூ.3555 கோடி தேவை என ஒன்றிய அரசுக்கு கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது என கூறினார். மேலும் பேசிய அவர் 11 கோரிக்கைகளை திமுக வலியுறுத்தியதாக தெரிவித்தார். அதாவது; * தமிழ்நாட்டில் ஏற்பட்டுள்ள புதிய சேதங்களை மதிப்பிட மீண்டும் ஒன்றிய அரசு குழுவை அனுப்பி வைக்க வேண்டும் * தமிழ்நாட்டின் மழை, வெள்ள சேதம் பற்றி மக்களவை, மாநிலங்களவையில் விவாதிக்க அனுமதிக்க கோரியுள்ளோம்.* முல்லைப்பெரியாறு, மேகதாது பிரச்சனை குறித்து விவாதிக்க அனுமதிக்க வேண்டும் என கோரியுள்ளோம். * தமிழ்நாட்டு மீனவர்கள் தாக்கப்படுவதையும், சிறை பிடிக்கப்படுவதையும் தடுக்க வேண்டும். * நீட் தேர்வை முழுமையாக திரும்ப பெறவும் 3 வேளாண் சட்டங்கள், குடியுரிமை திருத்த சட்டத்தை ரத்து செய்யவும் கோரிக்கை வைத்துள்ளோம் * குறைந்தபட்ச ஆதார விலையை நிர்ணயிக்க சட்டம் இயற்ற வேண்டும் * வெள்ளம் மற்றும் பயிர்களுக்கு ஏற்பட்டுள்ள சேதங்களுக்கு மாநில பேரிடர் நிவாரண நிதியை விடுவிக்க வேண்டும் * வேளாண் போராட்டத்தில் உயிரிழந்த விவசாயிகளின் குடும்பத்துக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் * விலைவாசி உயர்வு உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகள் குறித்து குளிர்கால கூட்டத் தொடரில் விவாதிக்க வேண்டும் * இலங்கை தமிழர்களுக்கு இந்திய குடியுரிமை வழங்கவும் கட்சதீவில் தமிழக மீனவரின் மீன்பிடி உரிமையை மீட்கவும் கோரிக்கை விடுத்துள்ளோம். * பருவநிலை மாநாட்டில் எடுக்கப்பட்ட முடிவுகளை ஒன்றிய அரசு செயல்படுத்தவும் திமுக உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்துள்ளதாக டி.ஆர்.பாலு தெரிவித்தார்.

மூலக்கதை