சர்வதேச நிதி அமைப்புகளிடம் மக்கள் வறுமை போக்க நிதி கேட்கும் தலிபான்

தினமலர்  தினமலர்
சர்வதேச நிதி அமைப்புகளிடம் மக்கள் வறுமை போக்க நிதி கேட்கும் தலிபான்

காபூல்: சர்வதேச நிதி அமைப்புகளிடம் ஆப்கன் குடிமக்களின் வறுமைகளைப் போக்க தலிபான் அரசு நிதி வழங்கும்படி கோரிக்கை விடுத்துள்ளது.

ஆப்கானிஸ்தானில் தலிபான் பயங்கரவாத அமைப்பு ஆட்சி செய்து வருகிறது. பிரதமர் முல்லா முகமது ஹாசன் அக்கந்து ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இதர நாடுகளின் உள்துறையில் தலிபான் அரசு தலையிடாது என்றும் பிற நாடுகள் ஆப்கானிஸ்தானுக்கு நிதி அளிக்க முன்வந்தால் தங்கள் அரசு வரவேற்கும் என்றும் கூறியுள்ளார்.

மற்ற நாடுகளுடன் சிறந்த பொருளாதார உறவை மேற்கொள்ள ஆப்கானிஸ்தானில் தலிபான் அரசு விரும்புவதாக கூறியுள்ளார். கடந்த ஆகஸ்ட் மாதத்தில் இருந்து தலிபான் ஆப்கானிஸ்தானை ஆட்சி செய்து வருகிறது. பதவியேற்ற நாள் முதலே கொரோனா தாக்கத்திலிருந்து பல்வேறு பொருளாதார சிக்கல்களை தலிபான் அரசு சந்தித்த வண்ணம் உள்ளது. இதையடுத்து இணையத்தில் பலர் தலிபான் அரசை விமர்சிக்க துவங்கினார். இதற்கு பதிலளிக்கும் வகையில் தொலைக்காட்சி பேட்டி ஒன்றில் பிரதமர் முல்லா இதைத் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

கடந்த 20 ஆண்டுகளாக அமெரிக்க அரசு அளித்து வந்த நிதி மூலமாக ஆப்கானிஸ்தான் 75 சதவீத பட்ஜெட் கிடைத்து வந்தது. தற்போது தலிபான் ஆட்சியில் வேலைவாய்ப்பின்மை, பணவீக்கம் அதிகரித்துள்ளது. ஆப்கானிஸ்தான் வங்கிகள் கடுமையான நிதி நெருக்கடிக்கு தள்ளப்பட்டன.

ஆப்கானிஸ்தானில் வசிக்கும் மூன்றரை கோடிக்கும் மேற்பட்ட மக்கள் பசி, பஞ்சம் பட்டினியால் தவித்து வருவதாக கூறிய ஐ.நா., தலிபான் அரசை எச்சரித்து வந்தது. வாழ்வாதாரம் இன்றி தவிக்கும் பல ஆப்கானிஸ்தான் மக்கள் தங்கள் வீடு மற்றும் உடமைகளை விற்கத் துவங்கிவிட்டனர்.

இதையடுத்து இதுகுறித்துப் பேசிய தாலிபான் பிரதமர் முல்லா முகமது, சர்வதேச நிதி அமைப்புகள் நிறுத்தி வைத்திருக்கும் நிதியை ஆப்கானிஸ்தானுக்கு மீண்டும் அளிக்க வேண்டும். அவ்வாறு அளித்தால்தான் ஆப்கானிஸ்தான் இயல்பு நிலைக்கு திரும்பும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார்.

காபூல்: சர்வதேச நிதி அமைப்புகளிடம் ஆப்கன் குடிமக்களின் வறுமைகளைப் போக்க தலிபான் அரசு நிதி வழங்கும்படி கோரிக்கை விடுத்துள்ளது.ஆப்கானிஸ்தானில் தலிபான் பயங்கரவாத அமைப்பு ஆட்சி செய்து

சமரசத்துக்கு இடமளிக்காமல்... அதிகாரத்துக்கு அடிபணியாமல்... நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்...

ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.

நன்றி. தினமலர்

இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.

You’ll usually find this icon in the upper right-hand corner of your screen. You may have more than one ad blocker installed.

You may have to select a menu option or click a button.

மூலக்கதை