மும்பை தாக்குதல் வழக்கில் குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்க வேண்டும்: அமெரிக்க வெளியுறவு அமைச்சர்

தினமலர்  தினமலர்
மும்பை தாக்குதல் வழக்கில் குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்க வேண்டும்: அமெரிக்க வெளியுறவு அமைச்சர்

வாஷிங்டன்-''மும்பை தாக்குதல் வழக்கை விரைந்து முடித்து குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்க வேண்டும்,'' என, அமெரிக்க வெளியுறவு துறை அமைச்சர் அன்டோனி பிளின்கன் வலியுறுத்தியுள்ளார்.

மஹாராஷ்டிரா மாநிலம் மும்பையில் 2008 நவம்பர் 26ல் பாகிஸ்தானைச் சேர்ந்த பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 166 பேர் உயிரிழந்தனர். இந்த சோக நிகழ்வின் 13ம் ஆண்டு நினைவு தினம் அமெரிக்காவில் அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி அமெரிக்க வெளியுறவு துறை அமைச்சர் அன்டோனி பிளின்கன் கூறியதாவது:மும்பை தாக்குதல் நடந்து 13 ஆண்டுகள் ஆகி விட்டன.

இந்த தாக்குதலில் அமெரிக்கர்கள் ஆறு பேர் உட்பட 166 பேர் பலியானதையும், இந்த சோகத்தில் இருந்து மீண்டெழுந்த மும்பை மக்களையும் இந்நாளில் நினைவு படுத்துகிறோம்.நீண்ட காலம் ஆகியும் மும்பை தாக்குதலுக்கு காரணமானோர் சட்டத்தின் முன் நிறுத்தப்படாமல் உள்ளனர். விரைவில் இந்த வழக்கு விசாரணையை முடித்து குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.

மும்பை தாக்குதலின் நினைவு தினம், வாஷிங்டன் நகரில் உள்ள இந்திய துாதரகத்தில் அனுசரிக்கப்பட்டது.இதில் வெளியுறவு துறை இணை அமைச்சர் வென்டி ஷெர்மன், தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்கள் துறை துணைச் செயலர் ஜெனிபர் லார்சன் மற்றும் துாதரக அதிகாரிகள் பங்கேற்றனர்.

வாஷிங்டன்-''மும்பை தாக்குதல் வழக்கை விரைந்து முடித்து குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்க வேண்டும்,'' என, அமெரிக்க வெளியுறவு துறை அமைச்சர் அன்டோனி பிளின்கன்

சமரசத்துக்கு இடமளிக்காமல்... அதிகாரத்துக்கு அடிபணியாமல்... நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்...

ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.

நன்றி. தினமலர்

இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.

You’ll usually find this icon in the upper right-hand corner of your screen. You may have more than one ad blocker installed.

You may have to select a menu option or click a button.

மூலக்கதை