சாலமன் தீவில் வன்முறை:

தினமலர்  தினமலர்
சாலமன் தீவில் வன்முறை:

கான்பெர்ரா,-ஆஸ்திரேலியா அருகில் அமைந்துள்ள சாலமன் தீவில் நடந்த வன்முறைக்கு பின், மூன்று சடலங்களை போலீசார் கண்டெடுத்தனர்.

தெற்கு பசிபிக் பெருங்கடலில் ஏராளமான தீவுக்கூட்டங்களை உள்ளடக்கியது சாலமன் தீவுகள். இதன் பிரதமராக மனாசே சோகாவரே பதவி வகிக்கிறார். தைவான் நாட்டுடன் இருந்த உறவை சமீபத்தில் துண்டித்த மனாசே, சீனாவுடன் கைகோர்த்தார். பிரதமரின் இந்த முடிவுக்கு அந்நாட்டு மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். நாடு முழுதும் பல இடங்களில் போராட்டம் வெடித்தது.பிரதமர் மனாசே சோகாவரே பதவி விலக வலியுறுத்தி ஹொனியரா நகரில் ஆயிரக்கணக்கான மக்கள் நேற்று திரண்டனர்.

அப்போது வன்முறை வெடித்தது. போலீசார் தடியடி நடத்தி பொதுமக்களை விரட்டியடித்தனர். அங்குள்ள சீனர்களின் கடைகள் மற்றும் நிறுவனங்களுக்கு தீ வைத்தனர். இதையடுத்து ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இந்நிலையில் கலவரம் நடந்த இடத்தில் இருந்து தீயில் எரிந்து கருகிய நிலையில் மூன்று சடலங்களை போலீசார் கண்டுபிடித்தனர். விசாரணை நடக்கிறது.

கான்பெர்ரா,-ஆஸ்திரேலியா அருகில் அமைந்துள்ள சாலமன் தீவில் நடந்த வன்முறைக்கு பின், மூன்று சடலங்களை போலீசார் கண்டெடுத்தனர். தெற்கு பசிபிக் பெருங்கடலில் ஏராளமான தீவுக்கூட்டங்களை

சமரசத்துக்கு இடமளிக்காமல்... அதிகாரத்துக்கு அடிபணியாமல்... நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்...

ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.

நன்றி. தினமலர்

இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.

You’ll usually find this icon in the upper right-hand corner of your screen. You may have more than one ad blocker installed.

You may have to select a menu option or click a button.

மூலக்கதை