‘ஆன்லைனில்’ மருந்து வணிகம் அப்பல்லோ – அமேசான் பேச்சு

தினமலர்  தினமலர்
‘ஆன்லைனில்’ மருந்து வணிகம் அப்பல்லோ – அமேசான் பேச்சு

புதுடில்லி:மின்னணு வர்த்தக நிறுவனமான ‘அமேசான்’ அதன் மருந்து வணிகத்துக்காக, ‘அப்பல்லோ ஹாஸ்பிட்டல்ஸ்’ நிறுவனத்துடன் பேச்சு நடத்தி வருவதாக கூறப்படுகிறது.
‘ரிலையன்ஸ் மற்றும் டாடா’ நிறுவனங்கள், இந்த பிரிவில் ஏற்கனவே நுழைந்துவிட்ட நிலையில், அமேசான் நிறுவனமும் முயற்சியை துவக்கி உள்ளது.இதற்கிடையே, ‘அப்பல்லோ ஹெல்த்’ நிறுவனம் மருந்து வணிகத்துக்காக, ஆன்லைன் வர்த்தக நிறுவனத்துடன் கூட்டு வைக்கும் முயற்சியில் இறங்கிய நிலையில், அமேசான் அந்த வாய்ப்பை பயன்படுத்த முயற்சி செய்து வருகிறது.
மேலும், அப்பல்லோ நிறுவனம், அதன் மருந்து வணிகத்தின் 20 சதவீத பங்குகளை விற்பனை செய்து, 3,750 கோடி ரூபாய் திரட்டவும் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.இருப்பினும், அமேசான் நிறுவனம், அப்பல்லோ ஹெல்த் நிறுவனத்தின் பங்குகளை வாங்கும் திட்டம் எதுவும் வைத்துள்ளதா என்பது தெரியவில்லை.

மூலக்கதை