கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் கொரோனாவால் மேலும் 8,874 பேர் பாதிப்பு, 9,481 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ், 621 பேர் உயிரிழப்பு

தினகரன்  தினகரன்
கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் கொரோனாவால் மேலும் 8,874 பேர் பாதிப்பு, 9,481 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ், 621 பேர் உயிரிழப்பு

புதுடெல்லி: நாட்டில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 4.68 லட்சத்தை தாண்டியது. அதே போல், பாதிப்பு 3.45 கோடியை தாண்டியது. இன்று காலை 8 மணியுடன் முடிந்த 24 மணி நேரத்தில், நாட்டில் கொரோனாவால் புதிதாக பாதித்தவர்கள், குணமடைந்தோர், பலியானோர், இறப்பு விகித நிலவரம் குறித்து மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:* புதிதாக 8,874பேர் பாதித்துள்ளனர்.* இதன் மூலம், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 3,45,72,523  ஆக உயர்ந்தது.* புதிதாக 621 பேர் இறந்துள்ளனர்.* இதனால், நாட்டின் மொத்த உயிரிழந்தோர் எண்ணிக்கை 4,68,554 ஆக உயர்ந்தது.* தொற்றில் இருந்து ஒரே நாளில் 9,481 பேர் குணமடைந்துள்ளனர்.* இதனால் குணமடைந்தோர் எண்ணிக்கை 3,39,98,278 ஆக உயர்ந்துள்ளது.* இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 1,05,691 பேருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.* குணமடைந்தோர் விகிதம் 98.34% ஆக உயர்ந்துள்ளது. உயிரிழந்தோர் விகிதம் 1.36% ஆக குறைந்துள்ளது.* சிகிச்சை பெறுவோர் விகிதம் 0.31% ஆக குறைந்துள்ளது.*இந்தியாவில் 1,21,94,71,134 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. நேற்று ஒரே நாளில் 82,86,058 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

மூலக்கதை