‛ஏர்செல் - மேக்சிஸ்' வழக்கு: சிதம்பரம் மற்றும் கார்த்தி ஆஜராக 'சம்மன்'

தினமலர்  தினமலர்
‛ஏர்செல்  மேக்சிஸ் வழக்கு: சிதம்பரம் மற்றும் கார்த்தி ஆஜராக சம்மன்

புதுடில்லி-ஏர்செல் - மேக்சிஸ் நிறுவனத்திற்கு முறைகேடாக அனுமதி வழங்கிய வழக்கு, டில்லி நீதிமன்றத்தில் விசாரிக்கப்படுகிறது. இதில் முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரம், அவரது மகனும், எம்.பி., யுமான கார்த்தி உள்ளிட்டோர் நேரில் ஆஜராக நீதிமன்றம் 'சம்மன்' அனுப்பி உள்ளது.

மூத்த காங்கிரஸ் தலைவர் சிதம்பரம் 2006ல் மத்திய நிதி அமைச்சராக இருந்தார். அப்போது ஏர்செல் - மேக்சிஸ் ஒப்பந்தத்திற்கு மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள அன்னிய முதலீட்டு வாரியம் அனுமதி அளித்தது.இதில் முறைகேடுகள் நடந்ததாக புகார் எழுந்தது. இதுதொடர்பாக சி.பி.ஐ., மற்றும் அமலாக்கத்துறையினர் விசாரணை நடத்தி சிதம்பரம், அவரது மகனும், லோக்சபா எம்.பி.,யுமான கார்த்தி, முன்னாள் மத்திய நிதி அமைச்சக அதிகாரிகள் உள்ளிட்டோர் மீது டில்லி நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர்.

இந்த வழக்கில் சிதம்பரம், கார்த்தி உட்பட குற்றம்சாட்டப்பட்ட அனைவரும் அடுத்த மாதம் 20ம் தேதி நேரில் ஆஜராக 'சம்மன்' அனுப்பும்படி நீதிபதி எம்.கே.நாக்பால் நேற்று உத்தரவிட்டார்.

புதுடில்லி-ஏர்செல் - மேக்சிஸ் நிறுவனத்திற்கு முறைகேடாக அனுமதி வழங்கிய வழக்கு, டில்லி நீதிமன்றத்தில் விசாரிக்கப்படுகிறது. இதில் முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரம், அவரது மகனும்,

சமரசத்துக்கு இடமளிக்காமல்... அதிகாரத்துக்கு அடிபணியாமல்... நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்...

ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.

நன்றி. தினமலர்

இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.

You’ll usually find this icon in the upper right-hand corner of your screen. You may have more than one ad blocker installed.

You may have to select a menu option or click a button.

மூலக்கதை