புதிய கேப்டன் கம்மின்ஸ்: ஆஸ்திரேலிய டெஸ்ட் அணிக்கு | நவம்பர் 26, 2021

தினமலர்  தினமலர்
புதிய கேப்டன் கம்மின்ஸ்: ஆஸ்திரேலிய டெஸ்ட் அணிக்கு | நவம்பர் 26, 2021

மெல்போர்ன்: ஆஸ்திரேலிய டெஸ்ட் அணியின் புதிய கேப்டனாக கம்மின்ஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.

ஆஸ்திரேலிய டெஸ்ட் அணிக்கு கேப்டனாக டிம் பெய்ன் இருந்தார். நான்கு ஆண்டுகளுக்கு முன், இவர் மீது எழுந்த பாலியல் புகார் தொடர்பாக சமீபத்தில் விமர்சிக்கப்பட்டது. இதனையடுத்து அணியின் நலன் கருதி கேப்டன் பதவியில் இருந்து விலகினார். இவருக்கு பதிலாக புதிய கேப்டனை நியமிக்க கிரிக்கெட் ஆஸ்திரேலியா (சி.ஏ.,) முடிவு செய்தது.

 

இப்பதவிக்கு வேகப்பந்துவீச்சாளர் பாட் கம்மின்ஸ் அல்லது முன்னாள் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் நியமிக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில் புதிய கேப்டனாக கம்மின்ஸ் அறிவிக்கப்பட்டுள்ளார். இவர், இங்கிலாந்துக்கு எதிரான ஆஷஸ் தொடரில் இருந்து அணியை வழிநடத்த உள்ளார். இதன்மூலம் ஆஸ்திரேலிய டெஸ்ட் அணிக்கு முழுநேர கேப்டனாக நியமிக்கப்பட்ட முதல் வேகப்பந்துவீச்சாளரானார். இதற்கு முன், 1956ல் ஒரே ஒரு போட்டிக்கு வேகப்பந்துவீச்சு ‘ஆல்–ரவுண்டர்’ ரே லிண்ட்வால், பகுதி நேர கேப்டனாக செயல்பட்டார்.

 

துணை கேப்டனாக ஸ்டீவ் ஸ்மித் அறிவிக்கப்பட்டுள்ளார். கடந்த 2018ல் தென் ஆப்ரிக்காவில் நடந்த டெஸ்டில் பந்தை சேதப்படுத்திய குற்றத்திற்கு துணை போனதாக இவரது கேப்டன் பதவி இரண்டு ஆண்டுகளுக்கு பறிக்கப்பட்டிருந்தது.

 

இதுகுறித்து கம்மின்ஸ் கூறுகையில், ‘‘டெஸ்ட் அணிக்கு கேப்டனாக நியமிக்கப்பட்டிருப்பதை மிகப் பெரிய கவுரவமாக கருதுகிறேன். டிம் பெய்ன் போல அணியை சிறப்பாக வழிநடத்த முயற்சிப்பேன்,’’ என்றார்.

மூலக்கதை