பாகிஸ்தான் பவுலர்கள் ஏமாற்றம்: லிட்டன் தாஸ் சதம் | நவம்பர் 26, 2021

தினமலர்  தினமலர்
பாகிஸ்தான் பவுலர்கள் ஏமாற்றம்: லிட்டன் தாஸ் சதம் | நவம்பர் 26, 2021

சட்டோகிராம்: முதல் டெஸ்டில் பாகிஸ்தான் பவுலர்கள் ஏமாற்ற, வங்கதேசத்தின் லிட்டன் தாஸ் சதம், முஷ்பிகுர் அரைசதம் விளாசினர்.

வங்கதேசம் சென்றுள்ள பாகிஸ்தான் அணி, இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் டெஸ்ட் சட்டோகிராமில் (சிட்டகாங்) துவங்குகிறது. ‘டாஸ்’ வென்று முதலில் ‘பேட்’ செய்த வங்கதேச அணிக்கு சைப் ஹசன் (14), ஷதாப் கான் (14), நஜ்முல் ஹொசைன் ஷான்டோ (14), கேப்டன் மோமினுல் ஹக் (6) ஏமாற்றினர்.

 

பின் இணைந்த முஷ்பிகுர் ரஹிம், லிட்டன் தாஸ் ஜோடி விக்கெட் சரிவிலிருந்து அணியை மீட்டது. ஹசன் அலி வீசிய 53வது ஓவரில் தொடர்ச்சியாக 2 பவுண்டரி அடித்த முஷ்பிகுர் அரைசதம் கடந்தார். மறுமுனையில் அசத்திய லிட்டன் தாஸ், டெஸ்ட் அரங்கில் தனது முதல் சதத்தை பதிவு செய்தார். இவர்களை பிரிக்க முடியாமல் பாகிஸ்தான் பவுலர்கள் திணறினர்.

முதல் நாள் ஆட்டநேர முடிவில் முதல் இன்னிங்சில் வங்கதேச அணி 4 விக்கெட்டுக்கு 253 ரன் எடுத்திருந்தது. முஷ்பிகுர் (82), லிட்டன் தாஸ் (113) அவுட்டாகாமல் இருந்தனர்.

மூலக்கதை