இந்திய அணியின் தென் ஆப்பிரிக்கப் பயணம் ரத்தா?

தினகரன்  தினகரன்
இந்திய அணியின் தென் ஆப்பிரிக்கப் பயணம் ரத்தா?

பாக்பத்: இந்திய அணியைத் தென் ஆப்பிரிக்கா அனுப்பும் முன் பிசிசிஐ மத்திய அரசிடம் ஆலோசித்து அனுமதி பெற்றே அனுப்ப வேண்டும் என மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் தெரிவித்துள்ளார். மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் அனுராக் தாக்கூர் இன்று பாக்பத் நகரில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது; அவரிடம் இந்திய அணியின் தென் ஆப்பிரிக்கப் பயணம் குறித்தும் தொடர் ரத்தாகுமா என்பது குறித்தும் கேள்வி எழுப்பப்பட்டது. அவர் அதற்கு பதில் அளிக்கையில், “தென் ஆப்பிரிக்கத் தொடர் ரத்தாகுமா என்பதை இப்போதே கூற இயலாது.ஆனால், இந்திய அணியைத் தென் ஆப்பிரிக்கா அனுப்பும் முன் பிசிசிஐ மத்திய அரசிடம் ஆலோசித்து அனுமதி பெற்றே அனுப்ப வேண்டும். ஏனென்றால் தென் ஆப்பிரிக்காவில்தான் புதிய வகை வைரஸ் பரவி வருகிறது. எங்கு கரோனா வைரஸ் பரவல் அதிகமாக இருக்கிறதோ அங்கு இந்திய அணியை விளையாட அனுப்புவது சரியான முடிவாக இருக்காது. பிசிசிஐ ஆலோசிக்கும்போது, இதுபற்றி விரிவாகப் பேசுவோம். தென் ஆப்பிரிக்காவிலிருந்து வருவோருக்குப் பயணக் கட்டுப்பாடுகளை மத்திய அரசு விதித்து, கட்டுப்பாடுகள் விதித்தால், இந்திய அணி அங்கு செல்வதிலும் சிக்கல் நேரிடும்.ஒமைக்ரான் வைரஸ் குறித்து இன்னும் முழுமையான தகவல் வெளியான பின்புதான், வரும் நாட்களில் இந்திய அணியின் பயணம் ரத்தாகுமா அல்லது தொடர் நடக்குமா என்பது தெரியவரும் இவ்வாறு கூறினார்.

மூலக்கதை