அன்னிய நேரடி முதலீடு ‘எக்ஸ்பிரஸ்’ வேகத்தில் அனுமதி

தினமலர்  தினமலர்
அன்னிய நேரடி முதலீடு ‘எக்ஸ்பிரஸ்’ வேகத்தில் அனுமதி

புதுடில்லி:நாட்டில் அன்னிய நேரடி முதலீட்டு திட்டங்களுக்கு விரைவாக அனுமதி அளிக்கப்பட்டு வருவதாகவும், தற்போதைய நிலவரப்படி, இன்னும் 29 திட்டங்களுக்கு மட்டுமே அனுமதி வழங்குவது பாக்கி இருப்பதாகவும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய தொழில் மேம்பாடு மற்றும் உள்நாட்டு வர்த்தக துறையின் செயலர் அனுராக் ஜெயின், இது குறித்து தெரிவித்துஉள்ள தாவது:அன்னிய முதலீட்டு திட்டங்களுக்கு அரசு விரைந்து அனுமதி அளித்து வருகிறது. இன்னும் 29 திட்டங்களுக்கான அனுமதி மட்டுமே பாக்கி உள்ளது.
கொரோனா தொற்று நோய் பரவலை தொடர்ந்து, வெளிநாட்டு நிறுவனங்கள் அதை ஒரு சந்தர்ப்பமாக பயன்படுத்தி, உள்நாட்டு நிறுவனங்களை கையகப்படுத்துவதை தடுக்க, இந்தியாவுடன் எல்லையை பகிர்ந்து கொள்ளும் நாடுகளிலிருந்து வரும் அன்னிய நேரடி முதலீடுகளுக்கு, அரசின் முன் அனுமதி கட்டாயம் பெற வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சீனா, பங்களாதேஷ், பாகிஸ்தான், பூட்டான், நேபாளம், மியான்மர், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகள் நில எல்லையை பகிர்ந்து கொள்வதால், இந்நாடுகளிலிருந்து வரும் அன்னிய முதலீட்டு திட்டங்களுக்கு, அரசின் முன் அனுமதி பெறுவது கட்டாயமாகும்.இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

மூலக்கதை