இந்தியா - மியான்மர் எல்லையில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்!: ரிக்டர் அளவுகோலில் 6.3-ஆக பதிவு

தினகரன்  தினகரன்
இந்தியா  மியான்மர் எல்லையில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்!: ரிக்டர் அளவுகோலில் 6.3ஆக பதிவு

மியான்மர்: மியான்மர் - இந்தியா எல்லையில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கம் வங்கதேசம், மியான்மர், இந்தியாவின் மிசோரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் பதிவானது. இந்தியா - மியான்மர் எல்லையில் அதிகாலை 5 மணியளவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக ஐரோப்பிய மத்திய தரைக்கடல் நிலநடுக்க ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வங்கதேசம் நாட்டின் சிட்டகாங்கில் இருந்து 175 கிலோ மீட்டர் தொலைவில் உணரப்பட்ட இந்த நிலநடுக்கம், ரிக்டர் அளவுகோலில் 6.3 என பதிவாகியுள்ளது. பூமியின் 40 அடி ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன் தொடர்ச்சியாக இந்தியாவிலும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. மிசோரம் மாநிலத்தின் தென்சால் பகுதியில் 6.1 என்ற ரிக்டர் அளவில் பூமியின் 12 கிலோ மீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் தொடர்பான பாதிப்புகள் குறித்து உடனடி தகவல்கள் வெளியாகவில்லை.

மூலக்கதை