அமெரிக்காவில் 187 ஆண்டு பழமையான தாமஸ் ஜெப்பர்சன் சிலை அகற்றம்

தினமலர்  தினமலர்
அமெரிக்காவில் 187 ஆண்டு பழமையான தாமஸ் ஜெப்பர்சன் சிலை அகற்றம்

வாஷிங்டன்: பல்வேறு அரசு நிறுவனங்கள் செயல்படும் அமெரிக்காவிவின் புகழ் பெற்ற நியூயார்க் சிட்டி ஹாலில் இருந்து தாமஸ் ஜெப்பர்சன் சிலை அகற்றப்பட்டது. தாமஸ் ஜெப்பர்சன் அமெரிக்காவின் 3வது அதிபராக தேர்வு செய்யப்பட்டவர் ஆவார்.


மக்கள் அதிகம் வந்து செல்லும் வாஷிங்டனில் உள்ள இந்த நினைவுச் சின்னம் நாட்டின் தலைநகரில் பிரபலமானது. 7 மணி நேரமாக இந்த சிலையை மாற்றும் பணி கவனமாக நடந்தது. இந்தச்சிலை வரலாற்று புகழ்மிக்க சொசைட்டி ஹாலில் வைக்கப்பட்டது.
அமெரிக்காவில் அடிமை முறையை ஆதரித்தவர் ஜெப்பர்சன். அவரே 600 அடிமைகளுக்கு உரிமையாளராக இருந்தார். இதனாலேயே அவரது சிலையை வைத்திருப்பதற்கு எதிர்ப்பு இருந்து வந்தது. இதையடுத்தே அவரது சிலையை அகற்ற முடிவு செய்யப்பட்டது.சிலை அகற்றம் தொடர்பாக நடத்தப்பட்ட வாக்கெடுப்பில் அகற்றத்திற்கு ஆதரவாகவே ஓட்டுக்கள் கிடைத்தன.


அமெரிக்காவின் மூன்றாவது ஜனாதிபதி மற்றும் சுதந்திர பிரகடனத்தின் முதன்மை எழுத்தாளர் தாமஸ் ஜெபர்சன் ஆவார். வர்ஜீனியாவின் காமன்வெல்த் ஆளுநராக இருந்த கான்டினென்டல் காங்கிரசில் உறுப்பினராகவும், முதல் அமெரிக்க வெளியுறவு செயலாளர், அமெரிக்காவின் இரண்டாவது துணைத் தலைவராகவும், வர்ஜீனியாவிலுள்ள சார்லட்டெஸ்வில்லியில் வர்ஜீனியா பல்கலைக்கழகத்தின் நிறுவனராகவும் இருந்தார்.
தாமஸ் ஜெபர்சன் அமெரிக்காவை உருவாக்கியவர்களில் ஒருவர். இந்த சிலை அகற்றத்திற்கு ஆதரவாகவும், எதிராகவும் விமர்சனங்கள் எழுந்துள்ளன.

வாஷிங்டன்: பல்வேறு அரசு நிறுவனங்கள் செயல்படும் அமெரிக்காவிவின் புகழ் பெற்ற நியூயார்க் சிட்டி ஹாலில் இருந்து தாமஸ் ஜெப்பர்சன் சிலை அகற்றப்பட்டது. தாமஸ் ஜெப்பர்சன் அமெரிக்காவின் 3வது

சமரசத்துக்கு இடமளிக்காமல்... அதிகாரத்துக்கு அடிபணியாமல்... நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்...

ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.

நன்றி. தினமலர்

இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.

You’ll usually find this icon in the upper right-hand corner of your screen. You may have more than one ad blocker installed.

You may have to select a menu option or click a button.

மூலக்கதை