ஆங்கில கால்வாயில் விபத்து படகு கவிழ்ந்த விபத்தில் 31 பேர் பலி

தினமலர்  தினமலர்

பாரிஸ்:பிரான்சில் இருந்து பிரிட்டனுக்கு அகதிகளுடன் சென்ற படகு, ஆங்கிலக் கால்வாயில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 31 பேர் உயிரிழந்தனர்.
உள்நாட்டு போர் நடக்கும் சூடான், ஈராக், ஆப்கன், சிரியா போன்ற நாடுகளைச் சேர்ந்தவர்கள் உயிர் பிழைக்க சட்ட விரோதமாக பிரிட்டன், கிரீஸ் போன்ற நாடுகளில் குடியேறுகின்றனர். கடல் சீற்றம்இதற்காக அவர்கள் ஆபத்து நிறைந்த அட்லாண்டிக் கடல் பகுதியில் பயணம் செய்து, பிரான்சின் வடக்கு பகுதியில் உள்ள தீவுகளுக்கு வருகின்றனர்.

அங்கிருந்து படகில் ஆங்கிலக் கால்வாய் வழியே பிரிட்டனில் சட்ட விரோதமாக குடியேறுகின்றனர். இதுபோல பிரான்சில் இருந்து 34 அகதிகளுடன் வந்த படகு ஆங்கிலக் கால்வாயில் கடல் சீற்றம் காரணமாக கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. அகதிகள் தண்ணீரில் மூழ்கினர்.

தகவல் அறிந்து வந்த பிரான்ஸ் கடலோர காவல் படையினர், நீரில் மூழ்கி இறந்த நிலையில் மிதந்து வந்த ஆறு பெண்கள் உள்ளிட்ட 31 பேரின் உடல்களை மீட்டனர். மயங்கிய நிலையில் உயிருடன் இருந்த இருவர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். காணாமல் போன ஒருவரை தேடும் பணி நடந்து வருகிறது.

இறந்தவர்கள் எந்த நாட்டைச் சேர்ந்தவர்கள் என்ற விபரம் தெரியவில்லை. இதற்கிடையே பணத்திற்காக அகதிகளை படகில் அழைத்து வந்து சட்ட விரோதமாக குடியமர்த்தும் கும்பலைச் சேர்ந்த நான்கு பேர் கைது செய்யப் பட்டுள்ளனர்.

அகதிகள், ஆங்கிலக் கால்வாயை கடப்பதை தடுக்க பிரான்ஸ் உரிய நடவடிக்கை எடுக்காமல் உள்ளதாக பிரிட்டன் குற்றஞ்சாட்டியுள்ளது. சூடானில் 10 பேர் பலி ஆப்ரிக்க நாடான சூடானின் தென்பகுதியில் உள்ள வெள்ளை நைல் நதியில் படகு கவிழ்ந்து, ஐந்து குழந்தைகள் உட்பட 10 பேர் உயிரிழந்தனர். படகில் அதிகளவு ஆட்களை ஏற்றியதால் விபத்து நிகழ்ந்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

பாரிஸ்:பிரான்சில் இருந்து பிரிட்டனுக்கு அகதிகளுடன் சென்ற படகு, ஆங்கிலக் கால்வாயில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 31 பேர் உயிரிழந்தனர்.உள்நாட்டு போர் நடக்கும் சூடான், ஈராக், ஆப்கன்,

சமரசத்துக்கு இடமளிக்காமல்... அதிகாரத்துக்கு அடிபணியாமல்... நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்...

ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.

நன்றி. தினமலர்

இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.

You’ll usually find this icon in the upper right-hand corner of your screen. You may have more than one ad blocker installed.

You may have to select a menu option or click a button.

மூலக்கதை