பதற்றமான சூழலில் மீண்டும் தைவானுக்கு செல்லும் அமெரிக்க எம்.பி.,க்கள்!

தினமலர்  தினமலர்
பதற்றமான சூழலில் மீண்டும் தைவானுக்கு செல்லும் அமெரிக்க எம்.பி.,க்கள்!

தைவானுக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் நடவடிக்கைகளில் சீனா ஈடுபட்டு வரும் நிலையில், அமெரிக்காவின் பிரதிநிதிகள் சபையின் 5 உறுப்பினர்கள் நாளை (நவ., 26) தைவான் செல்கிறார்கள்.


தைவானில் ஜனநாயக முறையிலான அரசு உள்ளது. சீனாவைப் போல மாண்டரின் மொழி பேசும் தைவான் மக்கள் 1949 உள்நாட்டுப் போரின் போது சீன கம்யூனிஸ்ட் கட்சியை தோற்கடித்தார்கள். பின்னர் தங்களுக்கான அரசாங்கத்தை அவர்களே அமைத்துக் கொண்டனர். இருப்பினும் தைவானை சீனா தங்களின் ஆளுகைக்கு உட்பட்ட பகுதி என கூறி வருகிறது. கடந்த சில மாதங்களாக தைவான் சீனா இடையே பதற்றமான சூழலே நிலவுகிறது.சீனாவை சமாளிக்க தைவானிடம் அமெரிக்கா நட்பு பாராட்டி வருகிறது.

அந்நாட்டு ராணுவத்துக்கு தேவையான ஆயுதங்களையும் வழங்குகிறது. இதனை சீனா ரசிக்கவில்லை. இம்மாத தொடக்கத்தில் அமெரிக்க எம்.பி.,க்கள் தைவானுக்கு ராணுவ விமானத்தில் வந்தனர். அதனைத் தொடர்ந்து சீனா தைவான் ஜலசந்தியை நோக்கி போர் தயார்நிலையிலான ரோந்து பயிற்சியை செய்தது.


இந்நிலையில் கிழக்காசிய நாடுகளான ஜப்பான் மற்றும் வடகொரியாவில் சுற்றுப்பயணத்தில் இருக்கும் 5 அமெரிக்க எம்.பி.,க்கள் மீண்டும் நாளை தைவானுக்கு செல்கின்றனர். அங்கு அதிபர் சாய் இங் வென்னை சந்தித்து தைவான் பாதுகாப்பு, பொருளாதார வாய்ப்புகள், பிராந்திய நிலைத்தன்மை போன்றவை குறித்து விவாதிப்பார்கள் என தெரிகிறது. முன்னதாக அமெரிக்கா, டிச., 9, 10-ல் நடக்கும் ஜனநாயகம் தொடர்பான ஆன்லைன் மாநாட்டில் பங்கேற்க தைவானுக்கு அழைப்பு விடுத்தது.

தைவானுக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் நடவடிக்கைகளில் சீனா ஈடுபட்டு வரும் நிலையில், அமெரிக்காவின் பிரதிநிதிகள் சபையின் 5 உறுப்பினர்கள் நாளை (நவ., 26) தைவான் செல்கிறார்கள்.nsimg2898777nsimgதைவானில்

சமரசத்துக்கு இடமளிக்காமல்... அதிகாரத்துக்கு அடிபணியாமல்... நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்...

ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.

நன்றி. தினமலர்

இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.

You’ll usually find this icon in the upper right-hand corner of your screen. You may have more than one ad blocker installed.

You may have to select a menu option or click a button.

மூலக்கதை