‘பி–நோட்’ முதலீடு அதிகரிப்பு

தினமலர்  தினமலர்
‘பி–நோட்’ முதலீடு அதிகரிப்பு

புதுடில்லி:பங்கேற்பு பத்திரங்கள் வாயிலாக, இந்திய சந்தைகளில் மேற்கொள்ளப்படும் முதலீடு, அக்டோபர் மாதத்தில், கடந்த 43 மாதங்களில் இல்லாத வகையில் அதிகரித்துள்ளது.
கடந்த அக்டோபர் மாத இறுதி நிலவரப்படி, ‘பி– நோட்ஸ்’ எனும் பங்கேற்பு பத்திரங்கள் வாயிலாக மேற்கொள்ளப்பட்ட முதலீடு, 1.02 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.தங்களை நேரடியாக பதிவு செய்து கொள்ளாமல் இந்திய பங்குச் சந்தைகளில் பங்கேற்க விரும்பும் அன்னிய முதலீட்டாளர்கள், பி–நோட் வாயிலாக முதலீடுகளை மேற்கொள்வர்.
இருப்பினும், ‘செபி’யின் தரவுகள் படி, இந்திய பங்கு, கடன் மற்றும் ஹைபிரிட் சந்தைகளில், பி–நோட் வாயிலாக 1.02 லட்சம் கோடி ரூபாய் முதலீடு செய்யப்பட்டுள்ளது.

மூலக்கதை