வெள்ளி இ.டி.எப்., திட்டம் ‘செபி’ விதிமுறைகள் வெளியீடு

தினமலர்  தினமலர்
வெள்ளி இ.டி.எப்., திட்டம் ‘செபி’ விதிமுறைகள் வெளியீடு

புதுடில்லி:வெள்ளி இ.டி.எப்., முதலீடு குறித்த செயல்பாட்டு விதிமுறைகளை, பங்குச் சந்தை கட்டுப்பாட்டு அமைப்பான ‘செபி’ வெளியிட்டது.
முதலீட்டாளர்கள், வெள்ளியில் தங்களுடைய முதலீட்டை வெளிப்படையான வகையில் மேற்கொள்வதற்கு வசதியாக, வெள்ளி இ.டி.எப்., அறிமுகம் செய்யப்படுகிறது. வெள்ளி இ.டி.எப்., பண்டுகளின் முதலீட்டு நோக்கங்கள், மதிப்பீடு, என்.ஏ.வி., எனும் நிகர சொத்து மதிப்பை நிர்ணயிப்பது, பிழைகளை கண்காணிப்பது போன்றவற்றுக்கான வழிகாட்டுதல்கள் இந்த விதிமுறைகளில் இடம்பெற்றுள்ளன.
தற்போது மியூச்சுவல் பண்டு நிறுவனங்கள், தங்க இ.டி.எப்., திட்டங்களை மேற்கொண்டு வருகின்றன.இந்நிலையில், தங்கத்தை போலவே, வெள்ளியிலும் வெளிப்படையான முதலீட்டுக்காக வெள்ளி இ.டி.எப்., அறிமுகம் செய்யப்படுகிறது.இவை, வெள்ளியை அடிப்படையாக கொண்டு, பங்குச் சந்தையில் பரிவர்த்தனை செய்யப்படும் நிதிகளாகும்.

இந்த நிதியை நிர்வகிப்பதற்கு, கமாடிட்டி டெரிவேடிவ்ஸ் சந்தை உட்பட, கமாடிட்டி சந்தையில் திறமையும் அனுபவமும் கொண்ட ஒரு பிரத்யேக பண்டு மேனேஜர் நியமிக்கப்படுவார் என்றும் செபி தெரிவித்துள்ளது.

மூலக்கதை