வளர்ச்சி வலுவாக உள்ளது ‘மூடிஸ்’ நிறுவனம் கணிப்பு

தினமலர்  தினமலர்
வளர்ச்சி வலுவாக உள்ளது ‘மூடிஸ்’ நிறுவனம் கணிப்பு

புதுடில்லி:இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி வலுவாக மீண்டு எழும் என, ‘மூடிஸ் இன்வெஸ்டார்ஸ் சர்வீஸ்’ நிறுவனம் தெரிவித்து உள்ளது.மேலும், நாட்டின் பொருளாதார வளர்ச்சி, நடப்பு நிதியாண்டில் 9.3 சதவீதமாகவும்; அடுத்த நிதியாண்டில் 7.9 சதவீதமாகவும் இருக்கும் என்றும், கணித்து அறிவித்துள்ளது.
இது குறித்து, மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:கொரோனா தடுப்பூசி போடுவதில் தொடர்ந்து முன்னேற்றம் காணப்படுவதை அடுத்து, அது நாட்டின் நிலையான பொருளாதார மீட்சிக்கு வழிவகுக்கும் என எதிர்பார்க்கலாம். அத்துடன் தடைகள் விலக்கப்பட்டு வருவதால், நுகர்வோர் தேவை, பொருளாதார செயல்பாடுகள் அதிகரித்து வருகின்றன.
கிட்டத்தட்ட 30 சதவீத மக்கள் இரு தடுப்பூசிகளையும்; 55 சதவீதம் பேர் குறைந்தது ஒரு தடுப்பூசியையும் போட்டிருக்கிறார்கள். இதன் காரணமாக, நுகர்வோர் நம்பிக்கை அதிகரித்து வருகிறது. ரிசர்வ் வங்கி குறைந்த வட்டி விகிதத்தை தொடர்ந்து பராமரித்து வருவதும் வளர்ச்சிக்கு உறுதுணையாக உள்ளது.இவ்வாறு மூடிஸ் தெரிவித்துள்ளது.

மூலக்கதை