மழை, வெள்ளத்தால் 350 கி. மீ., தூரத்திற்கு சாலைகள்... சேதம்; ஆய்விற்கு வந்த மத்திய குழுவிடம், கலெக்டர் விளக்கம்

தினமலர்  தினமலர்
மழை, வெள்ளத்தால் 350 கி. மீ., தூரத்திற்கு சாலைகள்... சேதம்; ஆய்விற்கு வந்த மத்திய குழுவிடம், கலெக்டர் விளக்கம்

கடலுார் மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழையாலும், தென் பெண்ணையாற்றில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்காலும் பலஇடங்களில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

நடவு செய்த சம்பா நெற்பயிர்கள் நீரில் மூழ்கி சேதமடைந்தன. 10 ஆயிரம் வீடுகளில் தண்ணீர் புகுந்தது. பல இடங்களில் வீடுகள் இடிந்தன. ஆங்காங்கே சாலை பெயர்ந்து ஜல்லிகள் தெரிகின்றன.வெள்ள சேதங்களுக்கு கூடுதல் நிவாரண உதவி வழங்க தமிழக அரசு சார்பில் மத்திய அரசிடம் நிதியுதவி அளிக்குமாறு கோரிக்கைவிடுத்தது.

அதையொட்டி தமிழகத்தில் வெள்ள சேதங்களைப் மத்திய குழு பார்வையிட்டது.கடலுார் அடுத்த பெரிய கங்கணாங்குப்பத்தில் அமைத்திருந்த புகைப்பட கண்காட்சியை மத்திய குழுவினர் பார்வையிட்டனர்.பின், வெள்ளத்தின் போது எடுக்கப்பட்ட வீடியோ முழுவதையும் மத்திய குழுவினர் பார்த்தனர். மாவட்டத்தில் ஏற்பட்ட வெள்ள பாதிப்புகள் குறித்து மாவட்ட நிர்வாகம் சார்பில் மத்திய குழுவிடம் கலெக்டர் பாலசுப்ரமணியம் அளித்த விவரம்:கடலுார் மாவட்டத்தில் 8800 கி.மீ., சாலைகள் உள்ளன. மழை மற்றும் வெள்ளத்தால் 350 கி.மீ., சாலைகள் பாதித்துள்ளன. கனமழைக் காரணமாக 62 கட்டங்கள் இடிந்துள்ளன. மாவட்டத்தில் பல இடங்களில் 3 பாலங்கள்சேதமடைந்துள்ளன. சம்பா நெல் நடவு செய்துள்ள பகுதிகளில் 4300 ஏக்கர் நெல் தண்ணீரில் மூழ்கி முழுவதும் சேதமடைந்துள்ளன.

3000 ஏக்கர் விளை நிலங்கள் வெள்ளத்தில் குண்டும் குழியுமாக மாறின. இது தவிர 3,000 குடிசைகள் கனமழையால் முழுவதும் சேதமடைந்துள்ளன. நகரம் மற்றும் கிராமங்களில் 950கால்நடைகள் இறந்தன. கடலுக்கு மீன் பிடிக்க செல்லாத மீனவர்களுக்கு வருவாய் பாதித்துள்ளது. மொத்தத்தில் கடலுார் மாவட்டத்தில் மழை வெள்ளத்தினால் பல கோடி ரூபாய் சேதம் ஏற்பட்டுள்ளது, என விளக்கினார்.

கடலுார் மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழையாலும், தென் பெண்ணையாற்றில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்காலும் பலஇடங்களில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.நடவு செய்த சம்பா நெற்பயிர்கள் நீரில் மூழ்கி

சமரசத்துக்கு இடமளிக்காமல்... அதிகாரத்துக்கு அடிபணியாமல்... நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்...

ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.

நன்றி. தினமலர்

இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.

You’ll usually find this icon in the upper right-hand corner of your screen. You may have more than one ad blocker installed.

You may have to select a menu option or click a button.

மூலக்கதை