5 மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு அதிகரிப்பு :தடுப்பூசி நடவடிக்கையை தீவிரப்படுத்த உத்தரவு

தினமலர்  தினமலர்
5 மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு அதிகரிப்பு :தடுப்பூசி நடவடிக்கையை தீவிரப்படுத்த உத்தரவு

சென்னை :தமிழகத்தில் 75.83 லட்சம் பேர், இரண்டாவது தவணை கொரோனா தடுப்பூசி செலுத்தாமல் உள்ள நிலையில், மாநிலம் முழுதும், தடுப்பூசி மற்றும் நோய் தடுப்பு நடவடிக்கைகளை விரிவுப்படுத்துமாறு, மாவட்ட கலெக்டர்களை மக்கள் நல்வாழ்வுத் துறை செயலர் ராதாகிருஷ்ணன் அறிவுறுத்தி உள்ளார்.

விழிப்புணர்வுஅவர் அனுப்பியுள்ள சுற்றறிக்கை: தமிழகத்தில் கடந்த மூன்று மாதங்களில், 2,011 பேர் கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளனர். அவர்களில் 1,675 பேர் கொரோனா தடுப்பூசி போட்டு கொள்ளாதவர்கள். அதன் அடிப்படையில், உயிரிழப்பு வாய்ப்பை அறிவதற்கான கணக்கீடு செய்யப்பட்டது. அதில், கொரோனா தடுப்பூசி செலுத்தி கொண்டவர்களை காட்டிலும், தடுப்பூசி செலுத்தாதவர்களுக்கு நோய் தொற்று ஏற்பட்டால் உயிரிழப்பு வாய்ப்பு 3.5 மடங்கு அதிக மாகும். இந்த உண்மையை பொதுமக்களுக்கு உணர்த்த வேண்டியது அவசியம். தடுப்பூசி தொடர்பான புரிதல்களையும், விழிப்புணர்வையும் மேம்படுத்துவது நம் கடமை. தமிழகத்தில் போதிய எண்ணிக்கையில் தடுப்பூசிகள் உள்ளன.ஈரோடு, நாமக்கல், சேலம், சென்னை, செங்கல்பட்டு மாவட்டங்களில், கொரோனா பாதிப்பு விகிதம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அதேவேளையில், கோவை, திருப்பூரில், அந்த விகிதம் ஏற்ற இறக்கமாக இருக்கிறது.

உறுதிஎனவே, தளர்வுகளை தவறாக பொதுமக்கள் கையாளாகாத வகையில், உரிய நடவடிக்கை எடுத்தல் வேண்டும். தளர்வுகள் அளிக்கப்பட்ட பல மாநிலங்களில் கொரோனா தொற்று அதிகரித்துள்ளது.அதை கருத்தில் கொண்டு, பொதுமக்களுக்கு தடுப்பூசி செலுத்துவதை விரைவுபடுத்த வேண்டும். அதேபோல, நோய் தடுப்புகள் முறையாக கடைப்பிடிக்கப்படுகிறதா என்பதையும் உறுதி செய்ய வேண்டும்.தினசரி தொற்று, 800 கீழ் குறைந்தாலும், கொரோனா பரவல் விகிதம், 1 சதவீதத்துக்கு கீழ் குறைந்தாலும், கண்காணிப்பு நடவடிக்கைகளை குறைக்கக் கூடாது. அப்போது தான், மீண்டும் தொற்று பரவல் அதிகரிப்பதை, ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து கட்டுப்படுத்த முடியும்.இவ்வாறு சுற்றறிக்கையில் கூறியுள்ளார்.

சென்னை :தமிழகத்தில் 75.83 லட்சம் பேர், இரண்டாவது தவணை கொரோனா தடுப்பூசி செலுத்தாமல் உள்ள நிலையில், மாநிலம் முழுதும், தடுப்பூசி மற்றும் நோய் தடுப்பு நடவடிக்கைகளை விரிவுப்படுத்துமாறு,

சமரசத்துக்கு இடமளிக்காமல்... அதிகாரத்துக்கு அடிபணியாமல்... நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்...

ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.

நன்றி. தினமலர்

இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.

You’ll usually find this icon in the upper right-hand corner of your screen. You may have more than one ad blocker installed.

You may have to select a menu option or click a button.

மூலக்கதை