‘அப்பா’ புவனேஷ்வர் | நவம்பர் 24, 2021

தினமலர்  தினமலர்
‘அப்பா’ புவனேஷ்வர் | நவம்பர் 24, 2021

மீரட்: புவனேஷ்வர் மனைவிக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது.  

இந்திய அணி வேகப்பந்து வீச்சாளர் புவனேஷ்வர் குமார் 31. இவரது மனைவி நுாபுர் நாகர். கடந்த 2017, நவ. 23ல் இந்த ஜோடிக்கு திருமணம் நடந்தது. நான்காவது திருமண நாள் முடிந்த நிலையில், இவர்களுக்கு டில்லியில் உள்ள தனியார் மருத்துவமனையில் நேற்று பெண் குழந்தை பிறந்துள்ளது. 

நியூசிலாந்துக்கு எதிரான ‘டி–20’ தொடரில் பங்கேற்ற புவனேஷ்வர் குமார், 3 போட்டியில் 3 விக்கெட் சாய்த்து தொடரை வெல்ல கைகொடுத்தார். இதனால் மனைவியுடன் இவர், டில்லி செல்லவில்லை. அடுத்து தென் ஆப்ரிக்க மண்ணில் நடக்கவுள்ள ஒருநாள் தொடருக்கு தயாராகும் இவர், இன்று மகளை பார்க்கச் செல்லவுள்ளார். 

மூலக்கதை