கல்வி நிறுவனங்களில் மாணவர்களின் சான்றிதழ் கட்டணத்திற்கு ஜி.எஸ்.டி.: டி.டி.வி.தினகரன் கடும் கண்டனம்

தினகரன்  தினகரன்
கல்வி நிறுவனங்களில் மாணவர்களின் சான்றிதழ் கட்டணத்திற்கு ஜி.எஸ்.டி.: டி.டி.வி.தினகரன் கடும் கண்டனம்

சென்னை: அண்ணா பல்கலைக் கழகம் உள்ளிட்ட கல்வி நிறுவனங்களில் மாணவர்களுக்கு வழங்கப்படும் அனைத்து வகை சான்றிதழ்களுக்கான கட்டணங்களுக்கும் 18% ஜி.எஸ்.டி. வரி விதிக்கப்படுவது கடும் கண்டனத்திற்குரியது என டி.டி.வி.தினகரன் கூறியுள்ளார். தமிழ்நாடு அரசு, ஒன்றிய  அரசுக்கு அழுத்தம் கொடுத்து மாணவர் சான்றிதழ்களுக்கான கட்டணத்திற்கு  ஜி.எஸ்.டி. வரியிலிருந்து விலக்குப் பெறுவதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என அவர் தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

மூலக்கதை