மோசமான வானிலை: சென்னை - சீரடி இடையே 2 விமானங்களின் சேவை இன்று திடீரென்று ரத்து

தினகரன்  தினகரன்
மோசமான வானிலை: சென்னை  சீரடி இடையே 2 விமானங்களின் சேவை இன்று திடீரென்று ரத்து

சென்னை: சென்னை - சீரடி இடையே 2 விமானங்களின் சேவை இன்று திடீரென்று ரத்து செய்யப்பட்டதால் 295 பயணிகள் தவித்து வருகின்றனர். சென்னையில் இருந்து சீரடிக்கு இன்று பிற்பகல் 1.55 மணிக்கு புறப்பட விமானம் தயாராக இருந்தது. சீரடியில் மோசமான வானிலை நிலவுவதால் விமான சேவை ரத்து செய்யப்பட்டதாக அதிகாரிகள் அறிவிக்ப்பட்டுள்ளது. மறுமார்க்கத்தில் சீரடியில் இருந்து மாலை 5.55 மணிக்கு சென்னை வரவேண்டிய விமானமும் ரத்து செய்யப்பட்டது.

மூலக்கதை