சிவசங்கர் மாஸ்டருக்கு உதவ முன்வந்த சோனுசூட்

தினமலர்  தினமலர்
சிவசங்கர் மாஸ்டருக்கு உதவ முன்வந்த சோனுசூட்

100க்கும் மேற்பட்ட படங்களுக்கு நடனம் அமைத்தவர் சிவசங்கர் மாஸ்டர். அதோடு, கண்ணா லட்டு தின்ன ஆசையா, பரதேசி, அரண்மனை என பல படங்களில் நடித்துள்ளார். இவர் தற்போது கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை எடுத்து வருகிறார். ஆபத்தான நிலையில் கவலைக்கிடமாக சிகிச்சை பெற்று வரும் சிவசங்கர் மருத்துவ செலவுக்கு பண உதவி தேவைப்படுவதாக அவரது மகன் தெரிவித்திருந்தார். இதையடுத்து கடந்த கொரோனா காலகட்டத்தில் ஏராளமான மக்களுக்கு உதவிகளை செய்து வந்தவரான பாலிவுட் நடிகர் சோனுசூட், சிவசங்கர் மாஸ்டர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் தகவல் அறிந்து தான் தேவையான உதவிகளை செய்வதாக உறுதி அளித்துள்ளார்.

மூலக்கதை