ராஷ்மிகாவின் குடும்ப பெயர் வெளியே வந்தது

தினமலர்  தினமலர்
ராஷ்மிகாவின் குடும்ப பெயர் வெளியே வந்தது

நடிகை சமந்தா நடிகார்ஜுனாவின் மகன் நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். அதன்பின் தன்னுடையை பெயரில் அக்கினேனி என்கிற தனது மாமனார் வீட்டு குடும்ப பெயரையும் சேர்த்துக் கொண்டார். அவர் தன்னுடைய கணவருடன் மனஸ்தாபத்தில் இருக்கிறார் என்பதே அவர் அக்கினேனி என்கிற பெயரை தனது பெயரில் இருந்து நீக்கிய பின்னர்தான் தெரியவந்தது.

லேட்டஸ்ட் விஷயம் என்னவென்றால் நடிகை ராஷ்மிகா குடும்பத்திற்கும் இதேபோன்று ஒரு குடும்ப பெயர் உள்ளது என்றும் தற்போது தெரிய வந்துள்ளது.. ராஷ்மிகா மந்தனா என்கிற பெயரில் மந்தனா என்பது அவரது தந்தை பெயர் மதன் மந்தனாவின் பெயரில் இருந்து சேர்த்துக்கொண்டது.. அதேசமயம் முண்டசதிரா என்பதுதான் அவர்களது குடும்ப பெயர்.. தனது பாஸ்போர்ட்டில் இந்த குடும்ப பெயரையும் சேர்த்து ராஷ்மிகா குறிப்பிட்டுள்ளார்.

தற்போது படப்பிடிப்புக்காக பாரிஸ் சென்றுளார் ராஷ்மிகா. அதை தெரிவிக்கும் விதமாக தனது பாஸ்போர்ட் மற்றும் டிக்கெட்டை தனது சோஷியல் மீடியா பக்கத்தில் அவர் பகிர்ந்திருந்தார். அதன்மூலம் தான் அவரது குடும்ப பெயர் தற்போது வெளியே தெரிய வந்துள்ளது.

மூலக்கதை