பொம்மை நாயகி படப்பிடிப்பை முடித்த யோகிபாபு

தினமலர்  தினமலர்
பொம்மை நாயகி படப்பிடிப்பை முடித்த யோகிபாபு

தற்போது முன்னணி காமெடி நடிகராக பல படங்களில் பிசியாக நடித்து வருகிறார் நடிகர் யோகிபாபு. அதேசமயம் கூர்க்கா, கோலமாவு கோகிலா, தர்மபிரபு, மண்டேலா என கதையின் நாயகனாக தன்னை மையப்படுத்தி தேடிவரும் படங்களையும் ஒப்புக்கொண்டு நடித்து வருகிறார். அந்தவகையில் தற்போது 'பொம்மை நாயகி' என்கிற படத்தில் கதாநாயகனாக நடிக்கிறார் யோகிபாபு. அறிமுக இயக்குனர் ஷான் இயக்குகிறார்.

யோகிபாபுவோடு இணைந்து சுபத்ரா, ஜி,எம் குமார், ஹரி, விஜய் டிவி ஜெயச்சந்திரன் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். கடந்த ஜனவரி மாதம் துவங்கிய இந்தப்படத்தின் படப்பிடிப்பு கொரோனா இரண்டாவது அலையால் தற்காலிகமாக தடைபட்டது. இந்தநிலையில் மீண்டும் துவங்கிய இந்தப்படத்தின் படப்பிடிப்பு தற்போது நிறைவடைந்துள்ளது. இந்த மகிழ்ச்சியை படக்குழுவினருடன் சேர்ந்து யோகிபாபு கேக் வெட்டி கொண்டாடிய புகைப்படங்கள் சோஷியல் மீடியாவில் வெளியாகியுள்ளன.

மூலக்கதை