பிரபுதேவா - ரெஜினாவின் அழியாத கோலங்கள்

தினமலர்  தினமலர்
பிரபுதேவா  ரெஜினாவின் அழியாத கோலங்கள்

இயக்குனர் பணியை சற்று ஒதுக்கி வைத்துவிட்டு, ஹீரோவாக தன்னை தேடி வரும் வாய்ப்புகளை கெட்டியாக பிடித்துக்கொண்டு தனது பார்வையை நடிப்பு பக்கம் திருப்பியுள்ளார் பிரபுதேவா. அந்தவகையில் சமீபத்தில் அவரது பொன் மாணிக்கவேல் படம் வெளியானது. அடுத்ததாக தேள், பகீரா ஆகிய படங்கள் வெளியாக இருக்கின்றன.. ஆனால் இவையெல்லாம் கமர்ஷியல் அம்சம் கொண்ட படங்கள்.

இதிலிருந்து முற்றிலும் மாறுபட்ட அதாவது எழுபதுகளில் வெளியான அழியாத கோலங்கள் பாணியில் ஒரு கதையில் நடிக்க இருக்கிறார் பிரபுதேவா. ரெஜினா கதாநாயகியாக நடிக்க, தெலுங்கு நடிகை அனசுயா பரத்வாஜ் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார். இதில் பிரபுதேவா எழுத்தாளர் ஆகவும் ரெஜினா ஆசிரியையாகவும் நடிக்கின்றனராம்.

பள்ளிக்கால வாழக்கையை குறிப்பாக மாணவ பருவத்தில் இருபாலருக்கும் இடையே ஏற்படும் இனக்கவர்ச்சி பற்றியும், வயது கூடியவர் மேல் ஏற்படும் ஈர்ப்பு பற்றியும் காதல் கலக்காமல் இந்தப்படத்தில் சொல்ல இருக்கிறார்களாம். கொரில்லா படத்தை இயக்கிய டான் சாண்டி இந்தப்படத்தை இயக்க உள்ளார்.

மூலக்கதை