இலங்கை பிடியில் விண்டீஸ்: தோல்வியை தவிர்க்க போராட்டம் | நவம்பர் 24, 2021

தினமலர்  தினமலர்
இலங்கை பிடியில் விண்டீஸ்: தோல்வியை தவிர்க்க போராட்டம் | நவம்பர் 24, 2021

காலே: முதல் டெஸ்டில் இலங்கை பிடியில் சிக்கியுள்ள விண்டீஸ் அணி தோல்வியை தவிர்க்க போராடி வருகிறது.

இலங்கை சென்றுள்ள விண்டீஸ் அணி, இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் டெஸ்ட் காலேயில் நடக்கிறது. முதல் இன்னிங்சில் இலங்கை 386 ரன் எடுத்தது. மூன்றாம் நாள் முடிவில், முதல் இன்னிங்சில் விண்டீஸ் அணி 9 விக்கெட்டுக்கு 224 ரன் எடுத்திருந்தது.

நான்காம் நாள் ஆட்டத்தில் பிரவீன் ஜெயவிக்ரமா ‘சுழலில்’ ஷனான் கேப்ரியல் (2) சிக்கினார். முதல் இன்னிங்சில் விண்டீஸ் அணி 230 ரன்னுக்கு ‘ஆல்–அவுட்’ ஆனது. இலங்கை சார்பில் ஜெயவிக்ரமா 4 விக்கெட் சாய்த்தார்.

 

கருணாரத்னே அபாரம்: பின் இரண்டாவது இன்னிங்சை துவக்கிய இலங்கை அணிக்கு கேப்டன் திமுத் கருணாரத்னே (83), மாத்யூஸ் (69*) கைகொடுக்க, 4 விக்கெட்டுக்கு 191 ரன் எடுத்து ‘டிக்ளேர்’ செய்தது.

 

கடின இலக்கு: பின், 348 ரன் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்குடன் இரண்டாவது இன்னிங்சை துவக்கிய விண்டீஸ் அணி, இலங்கை பவுலர்கள் தொல்லை தந்தனர். ரமேஷ் மெண்டிஸ் ‘சுழலில்’ கேப்டன் கிரெய்க் பிராத்வைட் (0), ஷாய் ஹோப் (3), கைல் மேயர்ஸ் (2), ஜேசன் ஹோல்டர் (0) சிக்கினர். லசித் எம்புல்டெனியா பந்தில் ஜெர்மைன் பிளாக்வுட் (9), ராஸ்டன் சேஸ் (1) அவுட்டாகினர்.

 

இரண்டாவது இன்னிங்சில் விண்டீஸ் அணி 6 விக்கெட்டுக்கு 52 ரன் எடுத்து, 296 ரன் பின்தங்கி இருந்த போது போதிய வெளிச்சமின்மை காரணமாக 4ம் நாள் ஆட்டம் முன்னதாகவே முடிவுக்கு வந்தது. போனர் (18), ஜோஷுவா டா சில்வா (15) அவுட்டாகாமல் இருந்தனர். இலங்கை சார்பில் மெண்டிஸ் 4, எம்புல்டெனியா 2 விக்கெட் கைப்பற்றினர்.

 

கடைசி நாளில் விண்டீசின் மீதமுள்ள விக்கெட்டுகளை விரைவில் கைப்பற்றும் பட்சத்தில் இலங்கை அணி சுலப வெற்றி பெறலாம்.

மூலக்கதை