லுங்கிடிக்கு ‘கொரோனா’: ஒருநாள் தொடரில் இருந்து விலகல் | நவம்பர் 24, 2021

தினமலர்  தினமலர்
லுங்கிடிக்கு ‘கொரோனா’: ஒருநாள் தொடரில் இருந்து விலகல் | நவம்பர் 24, 2021

ஜோகனஸ்பர்க்: தென் ஆப்ரிக்காவின் லுங்கிடிக்கு கொரோனா தொற்று உறுதியானது.

தென் ஆப்ரிக்க வேகப்பந்துவீச்சாளர் லுங்கிடி 25. அயர்லாந்து (ஜூலை), இலங்கை (செப்டம்பர்) தொடரில் பங்கேற்காத இவர், ‘டி–20’ உலக கோப்பைக்கு தேர்வு செய்யப்பட்டிருந்தார். ஆனால் ஒரு போட்டியில் கூட விளையாடவில்லை. இந்நிலையில் நெதர்லாந்துக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடருக்கு தேர்வு செய்யப்பட்டிருந்தார். இதற்காக எடுக்கப்பட்ட கொரோனா பரிசோதனையின் முடிவு ‘பாசிடிவ்’ என்று வந்துள்ளது. இதனையடுத்து தனிமைப்படுத்திக் கொண்டுள்ள இவர், நெதர்லாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரில் இருந்து விலகினார். இவருக்கு பதிலாக மற்றொரு வேகப்பந்துவீச்சாளர் ஜூனியர் டாலா சேர்க்கப்பட்டுள்ளார்.

 

இதேபோல, காயம் காரணமாக வேகப்பந்துவீச்சாளர் லிசாத் வில்லியம்ஸ், இத்தொடரில் இருந்து விலகினார். இவருக்கு மாற்று வீரர் அறிவிக்கப்படவில்லை.

இதுகுறித்து கிரிக்கெட் தென் ஆப்ரிக்கா (சி.எஸ்.ஏ.,) வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘‘கொரோனா தொற்று உறுதியானதால், நெதர்லாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரில் இருந்து லுங்கிடி விலகினார். இவரை, மருத்துவ குழுவினர் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்,’’ என, தெரிவித்திருந்தது.

மூலக்கதை