தெற்கு சூடானில் 2 மாதங்களாக கனமழை.. கடந்த 60 ஆண்டுகளில் இல்லாத வெள்ளபெருக்கால் 7 லட்சம் மக்கள் பாதிப்பு என ஐ.நா. தகவல்!!

சூடான் : வட ஆப்ரிக்க நாடுகளில் ஒன்றான தெற்கு சூடானில் கடந்த 60 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கனமழையும் இதனால் வெள்ளமும் ஏற்பட்டுள்ளது. வெள்ளத்தால் 7 லட்சம் பேர் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்து நிற்கின்றனர். வட ஆப்ரிக்க நாடுகளில் ஒன்றான தெற்கு சூடானில் கடந்த 2 மாதங்களாக கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. இதனால் தலைநகர் பென்டியுவில் எங்கு பார்த்தாலும் வெள்ளமாகவே காட்சியளிக்கிறது. மிகவும் ஏழை நாடுகளில் ஒன்றான தெற்கு சூடான் மக்கள் தற்போது செய்வதறியாது திகைத்து வருகின்றனர். பல ஆயிரம் குடிசை வீடுகளும், அறுவடைக்கு தயாராகி இருந்த சிறுதானிய பயிர்களும் முற்றிலும் வெள்ளத்தால் சூழப்பட்டுள்ளன. இதனால் மிகப்பெரிய வேதனை ஏற்பட்டுள்ளதாகவும் உலக நாடுகள் உதவிக்கரம் நீட்ட வேண்டும் என்றும் சூடான் மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
மூலக்கதை
