உலகில் கொரோனாவால் 25.96 கோடி பேர் பாதிப்பு :அமெரிக்காவில் ஒரு நாள் பாதிப்பு எண்ணிக்கை 1 லட்சத்தை தாண்டியது!!

தினகரன்  தினகரன்
உலகில் கொரோனாவால் 25.96 கோடி பேர் பாதிப்பு :அமெரிக்காவில் ஒரு நாள் பாதிப்பு எண்ணிக்கை 1 லட்சத்தை தாண்டியது!!

ஜெனீவா : உலக அளவில் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 25.96 கோடியாக அதிகரித்துள்ளது.சீனாவின் வுகான் நகரில் 2019 ஆம் ஆண்டு கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது கொரோனா வைரஸ் 221 நாடுகள் பிரதேசங்களுக்கு பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. கொரோனாவை கட்டுப்படுத்த தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையிலும் வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருகிறது.இந்நிலையில், உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 25 கோடியே 96 லட்சத்து 79 ஆயிரத்து 753 ஆக அதிகரித்துள்ளது. வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 1 கோடியே 96 லட்சத்து 77 ஆயிரத்து 824 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 23 கோடியே 48 லட்சத்து 10 ஆயிரத்து 663 பேர் குணமடைந்துள்ளனர். ஆனாலும், கொரோனா வைரசால் உலகம் முழுவதும் இதுவரை 51 லட்சத்து 91 ஆயிரத்து 266 பேர் உயிரிழந்துள்ளனர்.அமெரிக்காவில் ஒரே நாளில் 1,02,563 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் மூலம் கொரோனாவால் 48,967,759 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனாவில் இருந்து 38,781,230 பேர் மீண்டுள்ளனர். 9,388,337 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனாவால் 1,543 பேர் ஒரே நாளில் மரணமடைந்துள்ளனர். நாடு முழுவதும் மரணமடைந்தோர் எண்ணிக்கை 798,192 பேராக உயர்ந்துள்ளது.இதனிடையே கொரோனாவால் பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் இந்தியா இரண்டாவது இடத்திலும் பிரேசில் நாடு மூன்றாவது இடத்திலும் உள்ளது.

மூலக்கதை