உலகிலேயே மோசமான காற்று மாசுபாடு அடைந்த நகரமாக பாகிஸ்தானின் லாகூர் நகரம் அறிவிப்பு!!

தினகரன்  தினகரன்
உலகிலேயே மோசமான காற்று மாசுபாடு அடைந்த நகரமாக பாகிஸ்தானின் லாகூர் நகரம் அறிவிப்பு!!

இஸ்லாமாபாத் : உலகிலேயே மோசமான காற்று மாசுபாடு அடைந்த நகரமாக பாகிஸ்தானின் கலாச்சார நகரம் என அழைக்கப்படும் லாகூர் நகரம் அறிவிக்கப்பட்டுள்ளது. பகல் நேரத்திலேயே எங்கு பார்க்கினையும் அடர்ந்த பனி மூட்டம் போல், தூசு படலம் படர்ந்து காணப்படுகிறது. இதனால் பல ஆயிரம் பேர் நுரையீரல் பிரச்சனையால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஸ்விட்சர்லாந்தில் உள்ள காற்றின் தரக் கண்காணிப்பு நிறுவனமான, Platform IQAir, உலகில் காற்று மாசு அதிகம் உள்ள நகரங்களை பட்டியலிட்டுள்ளது. இதில் தான் பாகிஸ்தானின் லாகூர் நகரம் 203 காற்றுத் தர குறியீட்டுடன் முதல் இடத்தில் உள்ளது. 183 தர புள்ளிகளுடன் இந்திய தலைநகர் டேலி 2ம் இடத்தில் உள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. வங்கதேச தலைநகர் தாக்கா 3ம் இடத்திலும் கொல்கத்தா 4ம் இடத்திலும் உள்ளது. தீவிர நகரமயமாக்கல் மற்றும் அதிகரித்து வரும் மக்கள் தொகை வளர்ச்சி ஆகியவை காற்று மாசு அதிகரிக்கக் காரணம் என்று சுவிஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. 16ம் நூற்றாண்டு முதல் 19ம் நூற்றாண்டு வரை தோட்டங்களின் நகரம் என்று வர்ணிக்கப்பட்டு வந்த லாகூர், இன்று காற்று மாசில் உலகிலேயே முதல் இடத்தை பிடித்துள்ளது மக்களை கவலைக்கு உள்ளாக்கி உள்ளது. இந்த மாசுக்கு வாகன நெரிசலும், நெல், தானியங்களை எரிப்பதும் காரணமாக கூறப்படுகிறது. காற்று மாசுவை கட்டுப்படுத்த கோரி, பெண்கள் படை அரசுக்கு எதிராக கண்டன ஆர்ப்பாட்டங்களை நடத்தி வருகின்றனர்.

மூலக்கதை