ஹிந்தி நடிகரின் பிறந்தநாள் பார்ட்டியில் மாளவிகா மோகனன்

தினமலர்  தினமலர்
ஹிந்தி நடிகரின் பிறந்தநாள் பார்ட்டியில் மாளவிகா மோகனன்

கேரளத்து பெண்ணான மாளவிகா மோகனன், கடந்த 2013-ம் ஆண்டு மலையாளத்தில் துல்கர் சல்மான் நடித்த 'பட்டம் போல' படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார். பின்னர் கன்னடம், இந்தி என பிற மொழி படங்களிலும் நடித்தார். தமிழில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினி நடித்த பேட்ட படம் மூலம் அறிமுகமானார். இதையடுத்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான மாஸ்டர் படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்து முன்னணி நடிகையாக உயர்ந்தார்.

தற்போது கார்த்திக் நரேன் இயக்கத்தில் உருவாகும் 'மாறன்' படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நடிக்கிறார். இதுதவிர பாலிவுட் படத்திலும் நடித்து வருகிறார். பாலிவுட் படங்களில் நடிப்பதால் அந்த நடிகைகளுக்கு போட்டியாக கவர்ச்சி போட்டோஷூட் எடுத்து வெளியிட்டு வருகிறார். இந்நிலையில் நேற்று முன்தினம் பாலிவுட் நடிகர் கார்த்திக் ஆர்யனின் பிறந்தநாள் பார்ட்டியில் மாளவிகா மோகனன் கலந்துகொண்ட புகைப்படங்கள் இணையதளத்தில் வைரலாகி வருகின்றன. இந்தி நடிகைகளுக்கு சவால் விடும் வகையில் கவர்ச்சியான உடையில் மாளவிகா மோகனன் காட்சி அளிக்கிறார்.

மூலக்கதை