குட் நியூஸ்: அடுத்த மாதம் இந்தியாவில் அறிமுகமாகிறது கொரோனாவுக்கு எதிரான ரஷ்யாவின் ஸ்புட்னிக் லைட் தடுப்பூசி..!!

தினகரன்  தினகரன்
குட் நியூஸ்: அடுத்த மாதம் இந்தியாவில் அறிமுகமாகிறது கொரோனாவுக்கு எதிரான ரஷ்யாவின் ஸ்புட்னிக் லைட் தடுப்பூசி..!!

ரஷ்யா: கொரோனாவுக்கு எதிரான ஒற்றை டோஸ் தடுப்பூசியான ரஷ்யாவின் ஸ்புட்னிக் லைட் அடுத்த மாதம் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படவுள்ளது. ரஷ்யாவின் ஸ்புட்னிக் லைட் தடுப்பூசியின் 3ம் கட்ட பரிசோதனையை இந்தியாவில் நடத்த ஐதராபாத்தை தலைமையிடமாக கொண்ட டாக்டர் ரெட்டிஸ் ஆய்வகத்திற்கு இந்திய மருந்துகள் தர கட்டுப்பாட்டு அமைப்பின் நிபுணர் குழு கடந்த செப்டம்பர் மாதம் ஒப்புதல் வழங்கியது. இந்நிலையில் சோதனைகள் வெற்றிகரமாக முடிவடைந்ததை அடுத்து ஒற்றை டோஸ் கொரோனா தடுப்பூசியான ஸ்புட்னிக் லைட் இந்தியாவில் அடுத்த மாதம் அறிமுகம் செய்யப்படவுள்ளதாக ரஷ்யாவின் நேரடி முதலீட்டு நிதியத்தின் தலைமை செயல் அதிகாரி கிரில் டிமிட்ரிவ் தெரிவித்துள்ளார். ஸ்புட்னிக் லைட் தடுப்பூசி செலுத்திய 6 முதல் 8 மாதங்களில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிராக 80 சதவீதம் செயல் திறன் கொண்டது என்றும் அவர் கூறியுள்ளார். மேலும் இந்தியாவில் தயாரிப்பு நிறுவனமாக சீரம் நிறுவனம் இருக்கும் என்றும் இந்திய தடுப்பூசி திட்டத்தில் ஸ்புட்னிக் லைட் முக்கிய பங்கு வகிக்கும் என்று நம்புவதக்கவும் அவர் கூறினார். ஸ்புட்னிக் லைட் என்பது ரஷ்ய தடுப்பூசியான ஸ்புட்னிக் V -யின் பாகம்-1 ஆகும். இது இந்தியாவின் கொரோனா எதிர்ப்பு தடுப்பூசி திட்டத்தில் பயன்படுத்தப்படுகிறது.

மூலக்கதை