இந்திய ‘ஏ’ பவுலர்கள் ஏமாற்றம் * தென் ஆப்ரிக்கா ரன் குவிப்பு | நவம்பர் 23, 2021

தினமலர்  தினமலர்
இந்திய ‘ஏ’ பவுலர்கள் ஏமாற்றம் * தென் ஆப்ரிக்கா ரன் குவிப்பு | நவம்பர் 23, 2021

புளோம்போன்டின்: தென் ஆப்ரிக்க அணிக்கு எதிரான போட்டியில் இந்திய ‘ஏ’ பவுலர்கள் சுமாரான பந்துவீச்சை வெளிப்படுத்தினர். 

தென் ஆப்ரிக்கா சென்றுள்ள இந்திய ‘ஏ’ அணி, 3 நான்கு நாள் போட்டியில் பங்கேற்கிறது. இரு ‘ஏ’ அணிகள் மோதும் முதல் போட்டி நேற்று புளோயம்போன்டைனில் துவங்கியது. ‘டாஸ்’ வென்ற இந்திய ‘ஏ’ அணி கேப்டன் பிரியங்க் பஞ்சால், பீல்டிங் தேர்வு செய்தார். 

தென் ஆப்ரிக்க ‘ஏ’ அணிக்கு சாரெல், கேப்டன் பீட்டர் மாலன் ஜோடி துவக்கம் கொடுத்தது. போட்டியின் முதல் ஓவரை வீசிய நவ்தீப் சைனி, 3வது பந்தில் சாரெலை ‘டக்’ அவுட்டாக்கினார். ரேனார்டு (0) ஏமாற்ற பீட்டர், டோனி இணைந்து அணியை மீட்டனர். இருவரும் சதம் அடித்தனர். 3வது விக்கெட்டுக்கு 217 ரன் குவித்த போது, உம்ரான் மாலிக் ‘வேகத்தில்’ டோனி (117) அவுட்டானார். 

முதல் நாள் முடிவில் தென் ஆப்ரிக்க ‘ஏ’ அணி முதல் இன்னிங்சில் 3 விக்கெட்டுக்கு 343 ரன்கள் குவித்தது. பீட்டர் (157), ஸ்மித் (51) அவுட்டாகாமல் இருந்தனர். இந்திய ‘ஏ’ அணியின் நவ்தீப் சைனி, உம்ரான் மாலிக், அர்ஜான் தலா 1 விக்கெட் சாய்த்தனர்.

மூலக்கதை