மிதாலி ராஜ் ‘நம்பர்–3’ * பெண்கள் ஒருநாள் தரவரிசையில் | நவம்பர் 23, 2021

தினமலர்  தினமலர்
மிதாலி ராஜ் ‘நம்பர்–3’ * பெண்கள் ஒருநாள் தரவரிசையில் | நவம்பர் 23, 2021

துபாய்: ஐ.சி.சி., ஒருநாள் பெண்கள் பேட்டர் தரவரிசையில் இந்தியாவின் மிதாலி ராஜ் ‘நம்பர்–3’ இடத்தில் நீடிக்கிறார். 

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.,) சார்பில் ஒருநாள் அரங்கில் சிறந்து விளங்கும் வீராங்கனைகளுக்கான தரவரிசை பட்டியல் வெளியானது. பேட்டர் தரவரிசையில் ‘டாப்–10’ பட்டியலில் எவ்வித மாற்றமும் இல்லை. இந்திய அணி கேப்டன் மிதாலி ராஜ், 738 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்தில் நீடிக்கிறார். இந்திய துவக்க வீராங்கனை ஸ்மிருதி மந்தனா (710 புள்ளி) 6வது இடத்தில் உள்ளார். 

தென் ஆப்ரிக்காவின் லிஜெல்லே லீ (761), ஆஸ்திரேலியாவின் அலிசா ஹீலே (750) முதல் இரு இடத்தில் உள்ளனர். 

கோஸ்வாமி ‘நம்பர்–2’

‘பவுலிங்’ தரவரிசையில் இந்தியாவின் ஜூலன் கோஸ்வாமி (727 புள்ளி) ‘நம்பர்–2’ ஆக உள்ளார். முதலிடத்தில் ஆஸ்திரேலியாவின் ஜோனாசென் (760) உள்ளார். வங்கதேச அணிக்கு எதிரான உலக கோப்பை தகுதிச்சுற்று போட்டியில் 2 விக்கெட் சாய்த்த, பாகிஸ்தான் அணியின் இடது கை சுழற்பந்து வீச்சாளர் நஷ்ரா சாந்து, 4 இடங்கள் முன்னேறி 17வது இடம் பிடித்தார். ‘ஆல்–ரவுண்டர்’ தரவரிசையில் இந்தியாவின் தீப்தி சர்மா (299 புள்ளி) 5வது இடத்தில் தொடர்கிறார். 

மூலக்கதை