ஸ்வீடன் முதல் பெண் பிரதமராக மேக்டலினாவுக்கு பார்லி.,ஒப்புதல்

தினமலர்  தினமலர்
ஸ்வீடன் முதல் பெண் பிரதமராக மேக்டலினாவுக்கு பார்லி.,ஒப்புதல்

கோபன்ஹாகன்:ஸ்வீடன் நாட்டின் முதல் பெண் பிரதமராக மேக்டலினா ஆண்டர்சன், 54, பொறுப்பேற்க, அந்நாட்டு பார்லி., அங்கீகாரம் வழங்கிஉள்ளது.ஐரோப்பாவைச் சேர்ந்த ஸ்வீடன் நாட்டில், ஆளும் சமூக ஜனநாயக கட்சி தலைவரும், பிரதமருமான ஸ்டீபன் லோப்வென், சமீபத்தில் பதவி விலகினார்.

இதையடுத்து சமூக ஜனநாயக கட்சி தலைவராக தேர்வு செய்யப்பட்ட, மேக்டலினா ஆண்டர்சன், பிரதமர் பதவிக்கு போட்டிஇட்டார். இதற்கான ஓட்டெடுப்பு, ஸ்வீடனில் 'ரிக்ஸ்டக்' என அழைக்கப்படும் பார்லி.,யில் நேற்று நடந்தது. 349 உறுப்பினர்கள் அடங்கிய பார்லியில், மேக்டலினாவுக்கு ஆதரவாக, 117 ஓட்டுகளும், எதிராக, 174 ஓட்டுகளும் பதிவாயின. 57 பேர் ஓட்டெடுப்பில் பங்கேற்கவில்லை.

ஒருவர் அவைக்கு வரவில்லை. ஸ்வீடன் சட்டப்படி, குறைந்தபட்சம், 175 உறுப்பினர்கள் எதிர்த்து ஓட்டு போடாதவரை ஒருவர் பிரதமராக பொறுப்பேற்று, ஆட்சி நடத்தலாம். அதன்படி, ஸ்வீடனில் முதன் முறையாக மேக்டலினா ஆண்டர்சன் என்ற பெண் பிரதமர் தலைமையில் சமூக ஜனநாயக கட்சி, இடது மற்றும் மத்திய கட்சிகளின் கூட்டணி ஆட்சி பொறுப்பேற்க உள்ளது.

கோபன்ஹாகன்:ஸ்வீடன் நாட்டின் முதல் பெண் பிரதமராக மேக்டலினா ஆண்டர்சன், 54, பொறுப்பேற்க, அந்நாட்டு பார்லி., அங்கீகாரம் வழங்கிஉள்ளது.ஐரோப்பாவைச் சேர்ந்த ஸ்வீடன் நாட்டில், ஆளும் சமூக ஜனநாயக

சமரசத்துக்கு இடமளிக்காமல்... அதிகாரத்துக்கு அடிபணியாமல்... நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்...

ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.

நன்றி. தினமலர்

இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.

You’ll usually find this icon in the upper right-hand corner of your screen. You may have more than one ad blocker installed.

You may have to select a menu option or click a button.

மூலக்கதை