தனக்கு தானே திருமணம்; 90 நாளில் தனக்கு தானே விவாகரத்து; பிரேசில் பெண் அடித்த கூத்து

தினமலர்  தினமலர்
தனக்கு தானே திருமணம்; 90 நாளில் தனக்கு தானே விவாகரத்து; பிரேசில் பெண் அடித்த கூத்து

பிரேசிலியா: தன்னை தானே திருமணம் செய்த பிரேசிலை சேர்ந்த மாடல் அழகி, 90 நாளில் தன்னை தானே விவாகரத்து செய்துள்ள நிகழ்வு கேலிக்கூத்தாகியுள்ளது.

பிரேசில் நாட்டைச் சேர்ந்த மாடலிங் அழகி கிரிஸ் கலேரா. 33 வயதான இவர் மாடலிங் துறையில் அந்நாட்டில் பிரபலமாக இருந்து வருகிறார். கடந்த காலங்களில் ஏற்பட்ட காதல் முறிவுகளால் விரக்தி அடைந்து இனி தனியாக வாழலாம் என தீர்மானித்த அவர், தன்னை தானே திருமணம் செய்யும் முடிவை எடுத்திருக்கிறார். அதன்படி கடந்த செப்டம்பர் மாதம் கிரிஸ் கேலராவின் திருமணம் பிரேசிலின் பிரபல கத்தோலிக்க தேவாலயத்தில் நடைபெற்றது. திருமண நிகழ்வில் கிரிஸ் கலராவின் நண்பர்கள், உறவினர்கள் கலந்து கொண்டனர்.

திருமணம் முடிந்து 90 நாட்களே ஆன நிலையில், இப்போது தன்னை தானே விவாகரத்து செய்வதாக ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அவர் கூறுகையில், 'எனக்கு தற்போது மீண்டும் காதல் மீது நம்பிக்கை வந்துள்ளது. நான் என்னுடைய கனவு மனிதரை சந்தித்துள்ளேன். அதற்கு பிறகு தான் இந்த அசைக்க முடியாத நம்பிக்கை எனக்குள் வந்தது. ஆகவே நான் என்னை திருமணம் செய்து கொண்டதை விவாகரத்து செய்கிறேன். இருப்பினும் ன்னுடனான தனது வாழ்க்கை மகிழ்ச்சியாகவே இருந்தது,' எனக் கூறியுள்ளார். அவரின் இந்த அறிவிப்பு பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

பிரேசிலியா: தன்னை தானே திருமணம் செய்த பிரேசிலை சேர்ந்த மாடல் அழகி, 90 நாளில் தன்னை தானே விவாகரத்து செய்துள்ள நிகழ்வு கேலிக்கூத்தாகியுள்ளது.பிரேசில் நாட்டைச் சேர்ந்த மாடலிங் அழகி

சமரசத்துக்கு இடமளிக்காமல்... அதிகாரத்துக்கு அடிபணியாமல்... நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்...

ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.

நன்றி. தினமலர்

இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.

You’ll usually find this icon in the upper right-hand corner of your screen. You may have more than one ad blocker installed.

You may have to select a menu option or click a button.

மூலக்கதை