பெகாசஸ் ஸ்பைவேர்; இஸ்ரேல் நிறுவனம் மீது ஆப்பிள் நிறுவனம் வழக்கு

தினமலர்  தினமலர்
பெகாசஸ் ஸ்பைவேர்; இஸ்ரேல் நிறுவனம் மீது ஆப்பிள் நிறுவனம் வழக்கு

வாஷிங்டன்: பெகாசஸ் ஸ்பைவேர் என்னும் உளவு மென்பொருளை ஐபோன்களில் நிறுவுவதற்கு எதிராக அதனை உருவாக்கிய இஸ்ரேலின் என்.எஸ்.ஓ நிறுவனம் மீது முன்னணி செல்போன் நிறுவனமான ஆப்பிள் வழக்குத் தொடர்ந்துள்ளது.

இஸ்ரேல் நாட்டின் என்.எஸ்.ஓ நிறுவனம் தயாரித்த பெகாசஸ் ஸ்பைவேர் உலகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த ஸ்பைவேர் மூலமாக அரசியல் தலைவர்கள், நீதிபதிகள், பத்திரிகையாளர்கள், சமூக செயற்பாட்டாளர்கள் ஆகியோரின் தொலைபேசிகள் ஒட்டுக்கேட்கப்பட்டதாக சர்ச்சை கிளம்பியது. உலகம் முழுவதும் ஆப்பிள் ஐபோன்களும் பெருமளவில் ஒட்டுக்கேட்கப்பட்டது தெரியவந்தது.

இந்நிலையில், உளவு மென்பொருளான பெகாசஸின் தயாரிப்பு நிறுவனமான என்.எஸ்.ஓ நிறுவனம் மீது ஐபோன்களை தயாரிக்கும் ஆப்பிள் நிறுவனம் வழக்கு தொடர்ந்துள்ளது. அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாண நீதிமன்றத்தில் ஆப்பிள் நிறுவனம் தாக்கல் செய்துள்ள மனுவில், 'இஸ்ரேலின் என்.எஸ்.ஓ நிறுவனம் தனது செயலிகளை ஐபோன்களில் சட்டவிரோதமாக நிறுவுவதற்கு தடைவிதிக்க வேண்டும். தங்களுக்கு ஏற்பட்ட இழப்புகளுக்கு நஷ்ட ஈடாக 75 ஆயிரம் அமெரிக்க டாலர்களை வழங்க வேண்டும்,' எனக் குறிப்பிட்டுள்ளது.

மேலும், தங்களின் 165 கோடி உபகரணங்களில் ஐபோன்கள் மட்டும் 100 கோடி எண்ணிக்கையில் உள்ளன. இதனால் தங்களின் வாடிக்கையாளர்களை குறிவைத்து என்எஸ்ஓ பெரும் சதி செய்துள்ளதுதாக ஆப்பிள் குற்றஞ்சாட்டியுள்ளது. ஆனால், என்.எஸ்.ஓ நிறுவனம், பயங்கரவாதிகளை கண்டுபிடிக்க அரசாங்கங்களுக்கு உதவும் செயலுக்காக மட்டுமே பெகாசஸ் ஸ்பைவேரை உருவாக்கியதாக கூறியுள்ளது.

வாஷிங்டன்: பெகாசஸ் ஸ்பைவேர் என்னும் உளவு மென்பொருளை ஐபோன்களில் நிறுவுவதற்கு எதிராக அதனை உருவாக்கிய இஸ்ரேலின் என்.எஸ்.ஓ நிறுவனம் மீது முன்னணி செல்போன் நிறுவனமான ஆப்பிள் வழக்குத்

சமரசத்துக்கு இடமளிக்காமல்... அதிகாரத்துக்கு அடிபணியாமல்... நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்...

ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.

நன்றி. தினமலர்

இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.

You’ll usually find this icon in the upper right-hand corner of your screen. You may have more than one ad blocker installed.

You may have to select a menu option or click a button.

மூலக்கதை