காயத்தால் விலகினார் ராகுல்

தினகரன்  தினகரன்
காயத்தால் விலகினார் ராகுல்

நியூசிலாந்து அணியுடன் டெஸ்ட் தொடரில் மோதவுள்ள இந்திய அணியில் இருந்து தொடக்க வீரர் கே.எல்.ராகுல் காயம் காரணமாக விலகியுள்ளார். டி20 தொடரில் விளையாடியபோது அவருக்கு இடது தொடை பகுதியில் காயம் ஏற்பட்டது. சிகிச்சைக்குப் பின்னர், ராகுல் பெங்களூருவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகடமியில் தங்கி உடல்தகுதியை மேம்படுத்துவதுடன் பயிற்சி மேற்கொள்வார் என பிசிசிஐ தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன. டெஸ்ட் அணியில் கே.எல்.ராகுலுக்கு பதிலாக சூரியகுமார் யாதவ் சேர்க்கப்பட்டுள்ளார்.

மூலக்கதை