கனவு அணியில் ஹர்மன்பிரீத் * ‘பிக் பாஷ்’ தொடரில் அபாரம் | நவம்பர் 22, 2021

தினமலர்  தினமலர்
கனவு அணியில் ஹர்மன்பிரீத் * ‘பிக் பாஷ்’ தொடரில் அபாரம் | நவம்பர் 22, 2021

மெல்போர்ன்: ‘பிக் பாஷ்’ தொடரின் கனவு அணியில் இந்தியாவின் ஹர்மன்பிரீத் கவுர் சேர்க்கப்பட்டார். 

ஆஸ்திரேலியாவில் பெண்களுக்கான ‘பிக் பாஷ்’ கிரிக்கெட் (‘டி–20’) தொடர் நடக்கிறது. இம்முறை இந்தியா சார்பில் 8 வீராங்கனைகள் பல்வேறு அணிகளில் களமிறங்கினர். இதில் மெல்போர்ன் ரெனிகேட்ஸ் அணிக்காக இந்திய ஒருநாள், ‘டி–20’ அணி கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் பங்கேற்றார். லீக் சுற்றில் களமிறங்கிய 11 இன்னிங்சில் 3 அரைசதம் உட்பட 399 ரன் குவித்தார். இதன் சராசரி 66.50 ரன்னாக இருந்தது. தவிர பவுலிங்கில் கலக்கிய இவர் 15 விக்கெட் சாய்த்தார். அதிக சிக்சர் அடித்த வீராங்கனைகளில் ஹர்மன்பிரீத் கவுர் ‘நம்பர்–1’ ஆனார். இவர் 18 சிக்சர் விளாசினார். 

இவரது ‘ஆல் ரவுண்டர்’ திறமை கைகொடுக்க கடந்த ஆண்டு 7 வது இடம் பிடித்த மெல்போர்ன் ரெனிகேட்ஸ் அணி, இம்முறை புள்ளிப்பட்டியலில் இரண்டாவது இடம் பிடித்து, பைனலுக்கு முந்தைய ‘சாலஞ்சர்’ போட்டியில் (நவ. 25) பங்கேற்க தகுதி பெற்றது. இதையடுத்து நேற்று வெளியான ‘பிக் பாஷ்’ கனவு அணியில் ஹர்மன்பிரீத் சேர்க்கப்பட்டார். கேப்டனாக பெர்த் அணியின் சோபி டிவைன் தேர்வு செய்யப்பட்டார். 

மூலக்கதை