ஐஎஸ்எல் கால்பந்து வெற்றியுடன் தொடங்குமா சென்னையின் எப்சி? ஐதராபாத்துடன் இன்று மோதல்

தினகரன்  தினகரன்
ஐஎஸ்எல் கால்பந்து வெற்றியுடன் தொடங்குமா சென்னையின் எப்சி? ஐதராபாத்துடன் இன்று மோதல்

கோவா: 11 அணிகள் பங்கேற்றுள்ள 8வது இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டி கோவாவில் நடந்து வருகிறது. இதில் நேற்று இரவு நடப்பு சாம்பியன் மும்பை சிட்டி எப்சி, கோவா எப்சி அணிகள் மோதின. விறுவிறுப்புடன் நடந்த இந்த போட்டியில் மும்பை வீரர் இகோர் அங்குலோ 33 மற்றும் 36வது நிமிடத்தில் கோல் அடிக்க முதல் பாதியில் 2-0 என மும்பை முன்னிலை பெற்றது. 2வது பாதியிலும் மும்பையின் ஆதிக்கம் தொடர்ந்தது. 76வது நிமிடத்தில் மும்பை வீரர் கோர் கடாட் கோல் அடித்தார். கடைசி வரை போராடியும் கோவாவால் கோல் அடிக்க முடியவில்லை. இதனால் 3-0 என்ற கோல் கணக்கில் மும்பை வெற்றி பெற்றது.இன்று இரவு 7.30 மணிக்கு நடைபெறும் போட்டியில் சென்னையின் எப்சி-ஐதராபாத் எப்சி அணிகள் மோதுகின்றன. 2 முறை சாம்பியனான சென்னையின் எப்சி கடந்த சீசனில் 8வது இடத்துக்கு தள்ளப்பட்ட நிலையில் இன்று வெற்றியுடன் தொடங்குமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. புதிய தலைமை பயிற்சியாளர் பேசிதார் பாண்டோவிச், புது கேப்டன் அனிருத் தபா தலைமையில் களம் இறங்குகிறது. இரு அணிகளும் இதுவரை 4 போட்டிகளில் மோதி உள்ளன. இதில் தலா 2 வெற்றிகளை பெற்றுள்ளன. கடந்த சீசனில் நடந்த 2 போட்டியிலும் ஐதராபாத்தே வென்றுள்ளது.

மூலக்கதை