எங்கள் திட்டங்களை நன்றாக செயல்படுத்தினோம்: பாபர் அசாம் பேட்டி

தினகரன்  தினகரன்
எங்கள் திட்டங்களை நன்றாக செயல்படுத்தினோம்: பாபர் அசாம் பேட்டி

வெற்றிக்கு பின் பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம் கூறியதாவது: எங்கள் திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தினோம். ஆரம்பத்திலேயே அப்ரிடி எடுத்த விக்கெட்டுகள் மிகுந்த நம்பிக்கையை அளித்தது. சுழற்பந்து வீச்சாளர்களும் ஆதிக்கம் செலுத்தினர். நாங்கள் பேட்டிங் செய்தபோது 8வது ஓவரில் இருந்து பனியின் தாக்கம் ஆரம்பித்ததால் நன்றாக பந்து வந்தது. இதனால் எளிமையாக பார்ட்னர் ஷிப் அமைத்து கடைசி வரை விக்கெட் இழக்காமல் பேட்டிங் செய்ய விரும்பினோம். இந்தியாவை தோற்கடித்துவிட்டதனால் மட்டுமே டி20 உலக கோப்பை எளிய ஒன்றாக அமைந்து விடாது. நாங்கள் இந்த நம்பிக்கையை கைகொள்வோம். ஆனால், இதனை ஒரு போட்டியாக மட்டுமே கவனத்தில் கொள்வோம். இந்த தொடரில் செல்ல நீண்ட தொலைவு உள்ளது. நாங்கள் நன்றாக தயார் செய்து, வரலாற்றை எங்கள் மனதில் இருந்து விலக்கி வைத்தோம். எங்களுக்கு தரமான பயிற்சி மற்றும் பயிற்சி ஆட்டங்கள் தேவைப்பட்டன. உள்நாட்டு போட்டிகள் மிகுந்த நம்பிக்கையை அளித்தன. நாங்கள் நன்றாக தயாராகி உள்ளோம் என்றார்.

மூலக்கதை