தைவானில் நிலநடுக்கம்: ரிக்டரில் 6.5 ஆக பதிவு

தினமலர்  தினமலர்
தைவானில் நிலநடுக்கம்: ரிக்டரில் 6.5 ஆக பதிவு

தைபெய்: தைவானில் ரிக்டர் அளவில் 6.5 ஆக நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. உயிர்ச்சேதங்கள் குறித்து இதுவரை அறிவிப்பு வெளியாகவில்லை.

இதுகுறித்து அந்நாட்டு வானிலை மையம் தரப்பில் தெரிவித்ததாவது: தைவானின் கிழக்குப் பகுதியில் நேற்றிரவு மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 6.5 ஆக பதிவாகியது. இதன் ஆழம் 67 கிலோ மீட்டர் ஆகும். இந்த நில நடுக்கம் காரணமாக கட்டிடங்கள் குலுங்கின. இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

நில நடுக்கம் குறித்து தைவான் மக்கள் கூறியதாவது: வீட்டின் இரு சுவர்களும் குலுங்கின. நாங்கள் கடுமையான அதிர்வை உணர்ந்தோம். நாங்கள் மரணத்துக்காக பயந்தோம். எங்களுக்கு இந்த அனுபவம் வித்தியாசமாக இருந்தது. எங்கிருக்கிறோம் என்று கூட தெரியவில்லை. இவ்வாறு அவர்கள் கூறினர்.

தைவானில் தற்போது ஏற்பட்ட நிலநடுக்கத்தினால் பல்வேறு கட்டடங்கள் சரிந்தன. மீட்பு படையினர் மற்றும் தீயணைப்பு படையினர் இடிபாடுகளை அகற்றும் பணியில் ஈடுபட்டனர். உயிரிழப்புகள் ஏற்பட்டதா? ஏதேனும் பாதிப்புகள் ஏற்பட்டதா? என்பது குறித்த தகவல் இதுவரை வெளியாகவில்லை.

தைவானில் கடந்த 1999ம் ஆண்டு தைவானில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்துக்கு 2,400 பேர் பலியாகினர். அடுத்து 2018ம் ஆண்டு 6.4 ரிக்டர் அளவில் ஏற்பட்ட நில நடுக்கத்துக்கு 17 பேர் பலியாகினர் என்பது குறிப்பிடத்தக்கது.

தைபெய்: தைவானில் ரிக்டர் அளவில் 6.5 ஆக நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. உயிர்ச்சேதங்கள் குறித்து இதுவரை அறிவிப்பு வெளியாகவில்லை.இதுகுறித்து அந்நாட்டு வானிலை மையம் தரப்பில் தெரிவித்ததாவது:

சமரசத்துக்கு இடமளிக்காமல்... அதிகாரத்துக்கு அடிபணியாமல்... நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்...

ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.

நன்றி. தினமலர்

இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.

You’ll usually find this icon in the upper right-hand corner of your screen. You may have more than one ad blocker installed.

You may have to select a menu option or click a button.

மூலக்கதை